ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்துக்கு நிதி; திட்ட முன்மொழிவுகளை விரைவாகத் தயாரிக்குமாறு ஆளுநர் வலியுறுத்தல்
ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன் திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் திட்டங்களை விரைவாகத் தயாரித்து முன்வைக்கும் அளவுக்கேற்ப மேலதிக நிதியையும் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே, அனைத்து தொடர்புடைய திணைக்களங்களும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, திட்டங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உலக வங்கியின் நிதியுதவியுடன், மத்திய விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன் திட்டத்தின் […]
