ஆளுநர்

வவுனியா மாநகர சபைக்கு நிரந்தரக் கட்டடம் அமைப்பது தொடர்பில் சாதகமாகப் பரிசீலனை – ஆளுநர்

வவுனியா மாநகர சபைக்கான நிரந்தரக் கட்டடம் அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சாதகமாகப் பரிசீலிப்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (04.09.2026) வெள்ளிக்கிழமை மாலை வவுனியா மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கௌரவ பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் […]

வவுனியா மாநகர சபைக்கு நிரந்தரக் கட்டடம் அமைப்பது தொடர்பில் சாதகமாகப் பரிசீலனை – ஆளுநர் Read More »

பாடசாலைகளுக்கான மின்சாரக் கட்டண ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டிலிருந்து அதிகரிக்க சாதகமாகப் பரிசீலனை – ஆளுநர்

வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் மின்சாரக் கட்டண ஒதுக்கீடு போதுமானதாக இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலைகளின் தேவைகளைக் கருத்திற்கொண்டு அத்தொகையை அடுத்த ஆண்டிலிருந்து அதிகரிப்பது தொடர்பில் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (04.09.2026) வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர், மாவட்ட

பாடசாலைகளுக்கான மின்சாரக் கட்டண ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டிலிருந்து அதிகரிக்க சாதகமாகப் பரிசீலனை – ஆளுநர் Read More »

யாழ்., கிளிநொச்சியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் காணியற்ற குடும்பங்களுக்கு 30 வீடுகள் – லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளை நடவடிக்கை

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளையால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (03.09.2026) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் வீட்டுத் தேவைகள் தொடர்பில் லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளையிடம் ஆளுநரால் நேரடியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, இத்திட்டத்தின் முதல் கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில்

யாழ்., கிளிநொச்சியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் காணியற்ற குடும்பங்களுக்கு 30 வீடுகள் – லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளை நடவடிக்கை Read More »

நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மாறுபட்ட கோரிக்கைகள் குறித்து உரிய அரச ஆவணங்களின் அடிப்படையில் விடயத்தைத் தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்த பெயர் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இரு வார கால அவகாசம் வழங்கினார். கிளிநொச்சி, நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் மற்றும் அது சார்ந்த நடைமுறைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (03.09.2026) வியாழக்கிழமை முற்பகல்

நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண சபைக்கு முதன்முறையாக ‘முனைப்பழியற்ற அபிப்பிராயம்’; வரலாற்றுச் சாதனை

மாகாண சபை வரலாற்றில் முதல் தடவையாக தேசிய கணக்காய்வுத் தலைமை அதிபதியால் வடக்கு மாகாண சபைக்கு 2025ஆம் ஆண்டுக்கான ‘முனைப்பழியற்ற அபிப்பிராயம்’ (Unqualified Opinion) வழங்கப்பட்டிருப்பது, வடக்கு மாகாண நிர்வாக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான மைல்கல் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பெருமிதத்துடன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபைக்கும், அதன் கீழ் இயங்கும் ஒன்பது திணைக்களங்களுக்கும் 2025ஆம் ஆண்டுக்கான முனைப்பழியற்ற அபிப்பிராயம் கிடைக்கப்பெற்றமை மற்றும் இலங்கை அரச நிதிக் கணக்காளர்கள் சங்கத்தால்

வடக்கு மாகாண சபைக்கு முதன்முறையாக ‘முனைப்பழியற்ற அபிப்பிராயம்’; வரலாற்றுச் சாதனை Read More »

முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட பொருத்தமான பொறிமுறைகள் உருவாக்கப்படும்

எதிர்காலச் சந்ததியினரின் நலன் கருதி நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில், முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட பொருத்தமான பொறிமுறைகள் உருவாக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நீர்வளம் பேணுதலுக்கான பேராய்வுச் செயற்றிட்டம் மற்றும் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி’ எனும் தொனிப்பொருளிலான நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சி,

முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட பொருத்தமான பொறிமுறைகள் உருவாக்கப்படும் Read More »

வீட்டுக்குள் இருக்கும் திறமைகள் குடும்பத்தின் பொருளாதார வலிமையாக மாற வேண்டும் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்

பெண்களிடமும் இளையோரிடமும் ஏற்கனவே காணப்படும் திறமைகள் வெறுமனே காட்சிப்படுத்தப்படும் திறமைகளாக மட்டுப்படாமல், வருமானம் ஈட்டும் தொழில்களாகவும், நிலையான வாழ்வாதாரங்களாகவும், எதிர்காலத்தில் பிறருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில் முயற்சிகளாகவும் வளர வேண்டும். பயிற்சியின் உண்மையான வெற்றி சான்றிதழ் பெறுவதில் அல்ல, அந்தப் பயிற்சியின் மூலம் ஒருவரின் வாழ்க்கையிலும் குடும்பத்தின் பொருளாதார நிலையிலும் ஏற்படும் மாற்றத்திலேயே உள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாணக் கண்காட்சி –

வீட்டுக்குள் இருக்கும் திறமைகள் குடும்பத்தின் பொருளாதார வலிமையாக மாற வேண்டும் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் Read More »

மாகாண வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தவும், நடைமுறைச் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் ஆளுநர் வலியுறுத்தல்

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தைத் தொடர்ச்சியாக மீளாய்வு செய்து, திட்டங்களை உரிய காலத்துக்குள் நிறைவு செய்வதுடன், நிரல் அமைச்சுக்களால் வழங்கப்படும் மேலதிக நிதியை வினைத்திறனுடன் பயன்படுத்தவும், தொழில்நுட்ப ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட நடைமுறைச் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாண ஆளுநருக்கும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோருக்கும் இடையிலான

மாகாண வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தவும், நடைமுறைச் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் ஆளுநர் வலியுறுத்தல் Read More »

மின்னணு கொள்வனவு கண்காணிப்பு முறைமை மூலம் அரச கொள்வனவில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் வினைத்திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் – ஆளுநர்

அரச கொள்வனவு என்பது ஒரு நிர்வாக நடைமுறை மாத்திரமல்ல, மக்களுக்காக ஒதுக்கப்படும் பொது நிதியை வீதிகள், கட்டடங்கள், சுகாதாரச் சேவைகள், கல்வி வசதிகள், குடிநீர் திட்டங்கள் மற்றும் ஏனைய பொதுச் சேவைகளாக மாற்றும் முக்கியப் பொறிமுறையாகும். எனவே, பெறுகை நடவடிக்கைகளில் ஏற்படும் ஒவ்வொரு தாமதமும் நேரடியாக மக்களுக்கான சேவை வழங்கலையும் மாகாண அபிவிருத்தியையும் பாதிக்கும் நிலையில், மின்னணு பெறுகை கண்காணிப்பு முறைமையை (ePMS) வெறுமனே ஒரு இணையக் கருவியாக அல்லாது, வெளிப்படையானதும், நேர்த்தியானதும், பொறுப்புக்கூறலுடனானதுமான கொள்வனவுக் கலாசாரத்தை

மின்னணு கொள்வனவு கண்காணிப்பு முறைமை மூலம் அரச கொள்வனவில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் வினைத்திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் – ஆளுநர் Read More »

யாழ். மாவட்டக் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகளில் நிலவும் சவால்களுக்கு தீர்வு காண நடவடிக்கை – ஆளுநர் பணிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள குளங்களைத் தூர்வாரி அவற்றின் நீர்ப்பிடிப்பு மற்றும் நீர்வளப் பயன்பாட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சவால்களைத் துரிதமாகத் தீர்த்து, உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் இப்பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார். யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சவால்களைத் தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (31.08.2026) திங்கட்கிழமை மாலை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. குறிப்பாக

யாழ். மாவட்டக் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகளில் நிலவும் சவால்களுக்கு தீர்வு காண நடவடிக்கை – ஆளுநர் பணிப்பு Read More »