ஆளுநர்

ஆளுநர் செயலகத்தில் பொங்கல் விழா

வட மாகாண ஆளுநர் செயலகத்தில் தைப்பொங்கல் விழா கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் 20 ஜனவரி 2021 அன்று இடம்பெற்றது. வட மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர் , அமைச்சுக்களின் செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் மற்றும் ஆளுநர் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.      

முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம்

வடமாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் பெறுகைகள் மற்றும் நிர்வாக முகாமைத்துவ கற்கை நெறியை பூர்த்தி செய்த அரச சேவையிலுள்ள உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 20.01.2021 அன்று காலை 11 மணியளவில் யாழ்ப்பாண பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண  ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள், நான்காவது அணியினராக கற்கை நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து சான்றிதழ்களை பெற்றுக்கொண்டவர்களுக்கு வாழ்த்துகளை …

முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் Read More »

‘ஒரு வங்கி ஒரு கிராமம்’ நிகழ்ச்சி திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு

கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களின் சிந்தனையில் உருவான திட்டமான “ஒரு வங்கி ஒரு கிராமம்” நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாவது ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திருவையாறு மேற்கு கிராமத்தில் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், கௌரவ அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் பிரதிநிதி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதி விவசாய …

‘ஒரு வங்கி ஒரு கிராமம்’ நிகழ்ச்சி திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு Read More »

இரணைதீவு மக்கள் பிரச்சனைகள் தொடர்பான ஆய்வு

அசாதாரண சூழ்நிலை காரணமாக இரணைதீவிலிருந்து வெளியேறி மீண்டும் அங்கு குடியேறியுள்ள பொதுமக்களின் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 19 ஜனவரி 2021 அன்று முற்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கடற்தொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதிநிதி, ஆளுநரின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட செயலாளர், பூநகரி பிரதேச செயலாளர், கடற்படை உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக …

இரணைதீவு மக்கள் பிரச்சனைகள் தொடர்பான ஆய்வு Read More »

யாழ் நகர வடிகால் அமைப்பு திட்ட கலந்துரையாடல்

உலக வங்கியின் நிதியிடலில் முன்னெடுக்கப்படவுள்ள நகர வடிகால் அமைப்பு திட்ட கலந்துரையாடல், வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று 07.01.2021 காலை 10 மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவிச்செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட பொறியியலாளர், மாநகரசபை ஆணையாளர், உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள், யாழ்ப்பாண மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் …

யாழ் நகர வடிகால் அமைப்பு திட்ட கலந்துரையாடல் Read More »

மன்னார் மாவட்ட அரச கால்நடை அலுவலக கட்டட திறப்புவிழா

மன்னார் மாவட்ட அரச கால்நடை அலுவலக கட்டட திறப்புவிழா 06.01.2021 காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் திரைநீக்கம் செய்து கட்டடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதம செயலாளர், கால்நடை மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர், மிருக வைத்தியர்கள், மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், கமநல திணைக்களத்தை முன்னேற்றிச் செல்வதிலும் வலுப்படுத்துவதற்கும் தனது பூரண …

மன்னார் மாவட்ட அரச கால்நடை அலுவலக கட்டட திறப்புவிழா Read More »

நானாட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டட திறப்புவிழா

மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நானாட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டட திறப்புவிழா 06.01.2021 அன்று காலை 11.30 மணிக்கு இடம்பெற்றது. இதில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் கட்டடத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதம செயலாளர் கலந்துகொண்டிருந்தார். மேலும் ஆளுநரின் செயலாளர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், கூட்டுறவு சங்க  தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். முதலாவதாக, கூட்டுறவு சங்கத்தினுடைய பல்பொருள் …

நானாட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டட திறப்புவிழா Read More »

வடமாகாணத்தின் திணைக்கள தலைவர்கள் மற்றும் துறைசார் செயலாளர்களுடனான கலந்துரையாடல்

வடமாகாணத்திற்குட்பட்ட அனைத்து திணைக்கள தலைவர்கள் மற்றும் துறைசார் செயலாளர்களுடனான இவ்வருடத்திற்கான ஆரம்ப  கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (04.01.2021) காலை 10 மணியளவில் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து, 2021 ம் ஆண்டில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்த நாம் வடமாகாண அபிவிருத்தி என்ற விடயத்தில் பொருளாதார சமூக ரீதியில் பல்வேறு தடைகளை தாண்டவேண்டி ஏற்பட்டது. வடமாகாண …

வடமாகாணத்தின் திணைக்கள தலைவர்கள் மற்றும் துறைசார் செயலாளர்களுடனான கலந்துரையாடல் Read More »

2021 ம் ஆண்டின் கடமை ஆரம்ப நிகழ்வு

2021ம்  ஆண்டுக்கான வடமாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து திணைக்களங்களினதும் பணிகளின் ஆரம்ப நிகழ்வானது ஆளுநர் செயலகத்தில் கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (04.01.2021) காலை 10 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், துறைசார்ந்த அமைச்சின் செயலாளர்கள், இந்திய தூதரக அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், காவற்துறை  அதிகாரிகள்  மற்றும் அரசாங்க அதிபர்கள் ஆளுநர் செயலக உத்தியோகத்தர்கள் போன்றோர்  கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கௌரவ ஆளுநர் அவர்கள் மங்கள விளக்கேற்றி பணிகளை உத்தியோகபூர்வமாக …

2021 ம் ஆண்டின் கடமை ஆரம்ப நிகழ்வு Read More »

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – முல்லைத்தீவு மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்ட முதலாவதும் மற்றும் இறுதியுமான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட அரச அதிபர் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 19 டிசெம்பர் 2020 அன்று காலை 9.3௦ மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான மஸ்தான், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், இணைப்புச் …

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – முல்லைத்தீவு மாவட்டம் Read More »