ஆளுநர்

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் வட மாகாண வீதி பாதுகாப்பு சபை என்பவற்றிகிடையிலான கலந்துரையாடல்

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் உறுப்பினர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 02 ஆகஸ்ட் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களை குறைப்பதற்கு இந்த இரண்டு சபைகளும் இணைந்து எவ்வாறு செயற்படுதல் மற்றும் மக்களிடையே விபத்துக்கள் தொடர்பிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் வட மாகாண வீதி பாதுகாப்பு சபை என்பவற்றிகிடையிலான கலந்துரையாடல் Read More »

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் திரு.சரத் டாஷ் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் அலுவலகத்தில் இன்று (02) முற்பகல் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், இவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்காக 6.5 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்கள் தமது

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »

வடக்கிற்கு இரண்டு புதிய புகையிரத சேவைகள்

காங்கேசன்துறை முதல் கொழும்பு வரை இரண்டு புதிய புகையிரத சேவைகள் நாளை முதல் காலை மற்றும் இரவு வேளைகளில் இடம்பெறவுள்ளதாக யாழ் புகையிரத நிலையத்தின் தலைமை அதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார். கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையான இரண்டு புதிய புகையிரத சேவைகள் இன்று முதல் காலை மற்றும் இரவு நேரங்களில் ஆரம்பமாகியுள்ளதாகவும் இந்த சேவைகள் தினசரி இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். யாழிலிருந்து நாளை காலை 06.25 க்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படவுள்ள 4082 இலக்க புகையிரதம் காலை

வடக்கிற்கு இரண்டு புதிய புகையிரத சேவைகள் Read More »

வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பதற்கு கௌரவ ஆளுநர் நடவடிக்கை

வடமாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை (Northern Co-operative Development Bank -NCDB) ஸ்தாபிப்பதற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். வடமாகாணத்தை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடையச்செய்ய வேண்டுமென்ற கௌரவ ஆளுநர் அவர்களின் தூரநோக்கிற்கமைய வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி,

வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பதற்கு கௌரவ ஆளுநர் நடவடிக்கை Read More »

யாழ் புத்தகத் திருவிழா 2019

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019 ‘ எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் செப்டம்பர் 1ஆம் திகதி வரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மிகப்பிரமாண்டமாக இடம்பெறவுள்ள இந்த புத்தகக் கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், ஈழத்துப்படைப்புக்கள் உள்ளிட்ட உள்ளூர் மற்றும் இந்திய மூத்த எழுத்தாளர்களின் புத்தகங்களும் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை

யாழ் புத்தகத் திருவிழா 2019 Read More »

வடமாகாண சாரதி பயிற்சி பாடசாலைகளின் உரிமையாளர்களுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

வடமாகாண சாரதி பயிற்சி பாடசாலைகளின் உரிமையாளர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு கடந்த 23ஆம் திகதி ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்கள் உடல் அவயவ இழப்புக்களை கட்டுப்படுத்துவதற்காக கௌரவ ஆளுநரினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் ஒரு அங்கமாகவே சாரதி பயிற்சி பாடசாலைகளின் உரிமையாளர்களுடனான இந்த சந்திப்பு இடம்பெற்றது. சாரதி பயிற்சி பாடசாலைகள் அனுமதிப் பத்திரத்திற்கான பயிற்சிகளை வழங்கும் போது தரமானதும் முறையானதுமான பயிற்சிகளை வழங்கினால் இவ்வாறான வீதி

வடமாகாண சாரதி பயிற்சி பாடசாலைகளின் உரிமையாளர்களுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு Read More »

உயர்தரப் பரீட்சார்த்திகளின் நன்மை கருதி ஒலிபெருக்கிப் பாவனைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் – ஆளுநரின் ஊடக அறிக்கை

தற்பொழுது கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாணவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர். மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இவ்வாறான ஒலிபெருக்கிப்பாவனையை கட்டுப்படுத்துமாறு வைபவங்கள் மற்றும் விழாக்களை ஒழுங்குபடுத்துவோரிடம் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் அமுல்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு

உயர்தரப் பரீட்சார்த்திகளின் நன்மை கருதி ஒலிபெருக்கிப் பாவனைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் – ஆளுநரின் ஊடக அறிக்கை Read More »

ஐநா விசேட பிரதிநிதிக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுதந்திர உரிமைக்கான ஐநா சமாதான சபையின் விசேட பிரதிநிதி திரு கிளைமென்ற் நயல்சோசி வுயுலே அவர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 24 யூலை 2019 அன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து மாகாணத்தினுள் வசிக்கும் பொதுமக்களின் வாழ்க்கையினை மேம்படுத்த முன்னெடுக்கும் நிலம், நீர், நிதி மற்றும் நீதி தொடர்பான செயற்பாடுகள் தொடர்பில் ஐநா

ஐநா விசேட பிரதிநிதிக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு Read More »

வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் பிரதானியாக வைத்திய கலாநிதி கோபி சங்கர்

வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் பிரதானியாக வைத்திய கலாநிதி கோபி சங்கர் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் 23 யூலை 2019 அன்று மாலை இடம்பெற்றது. வடமாகாணத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களால் மக்கள் அதிகளவில் உயிரிழப்புக்கள், உடல் அவயவங்கள் மற்றும் சொத்திழப்புக்களுக்கும் முகம்கொடுத்து வருவதன் காரணமாக இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இந்த வீதிப் பாதுகாப்பு சபை செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.   – வடக்கு

வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் பிரதானியாக வைத்திய கலாநிதி கோபி சங்கர் Read More »

தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும் – ஆளுநர்

தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தழிழ் மொழி வாழவேண்டும். நாங்கள் மொழி அடையாளம் கொண்டவர்கள் ஆகையினாலே பாரதி சொன்னது போல் ஏனைய மொழியை படியுங்கள் ஆனால் தமிழை தாயாக கொண்டிருங்களென ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கு அமையை தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்கும் ‘தேசிய பால் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின்’ வடமாகாண அங்குரார்ப்பண நிகழ்வு கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் இன்று

தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும் – ஆளுநர் Read More »