“அடிமட்ட அமைப்புகள் சிறப்பாக இயங்கும் போது கிராமத்தின் வளர்ச்சியில் நாம் காத்திரமான வேறுபாட்டைக் காண முடியும் – கௌரவ ஆளுநர்
ஒரு கிராமத்தின் உண்மையான வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி என்பன, அக்கிராமத்தில் இயங்கும் அடிமட்ட அமைப்புகளின் சிறப்பான செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். இளவாலை ‘எழுச்சியகம்’ மக்கள் வலுவூட்டல் மையத்தின் 15ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கௌரவ ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், “அடிமட்ட அமைப்புகள் எவ்வளவு சிறப்பாக இயங்குகின்றனவோ, அப்போதே அக்கிராமத்தின் வளர்ச்சியில் நாம் காத்திரமான […]
