யாழ் மாவட்டத்தில், குளங்களைத் தூர்வாருவது தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குளங்களைத் தூர்வாரும் செயற்றிட்டத்தை, இந்த ஆண்டு எதிர்வரும் ஜூலை மாதத்தில் மீள ஆரம்பிப்பதற்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குளங்களைத் தூர்வாருவது தொடர்பான இந்த விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (11.06.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த ஆண்டு கந்தரோடைக் குளத்தில் முன்னெடுக்கப்பட்ட தூர்வாரும் செயற்றிட்டத்தின் மூலம் ஏற்பட்ட சாதகமான விளைவுகள் குறித்தும், அச்செயற்றிட்டத்தை முன்னெடுக்கும்போது எதிர்கொண்ட […]
