ஆளுநர்

மல்லாவி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட ‘ஜெயரட்ணம் நுண்கலையகம்’ கௌரவ ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.

இன்றைய அதிகாரிகளிடத்தில் வேலை செய்யாமல் இருந்தால் பிரச்சினையில்லாமல் இருந்துவிட்டுப் போகலாம்;, அதிக வேலை செய்தால் அதிக பிரச்சினைகள் வரும் (No work – No problem; More work – More problem) என்ற எண்ணம் உருவாகி வருகின்றது. இதனால், எமது சமூகத்துக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் உரியவாறு பயன்படுத்திக் கொள்ளும் நிலை அருகி வருகின்றது, என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவு, மல்லாவி மத்திய கல்லூரியின் மாணவர்களின் அழகியல் […]

மல்லாவி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட ‘ஜெயரட்ணம் நுண்கலையகம்’ கௌரவ ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. Read More »

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (17.06.2026) புதன்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், கடந்த கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் மற்றும் கல்வி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன. மேலும் கல்வி, விளையாட்டு மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களங்களின் ஊடாக பல்வேறு நிதி மூலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றங்களும் விரிவாக மீளாய்வு

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் துறைசார் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் ஆண்டிறுதியில் எதிர்பார்க்கப்படும் கனமழைக்கு முன்னதாக, மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதமாக நிறைவு செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண விவசாயம், கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நன்னீர் மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் துறைசார் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் செயலகத்தில் இன்று (17.06.2026) புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு விசேட

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் துறைசார் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

சுகாதார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சேவைகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போதே ஆளுநர் மேற்கண்டவாறு

சுகாதார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. Read More »

நாம் தற்போது ஆண்டின் நடுப்பகுதியைக் கடந்துள்ளோம். அபிவிருத்தி திட்ட வேலைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு, வர்த்தக வாணிப அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (15.06.2026) திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய கௌரவ ஆளுநர், நாம் தற்போது ஆண்டின் நடுப்பகுதியைக் கடந்துள்ளோம். எனவே, திட்டங்கள் அனைத்தும் துரிதப்படுத்தப்பட வேண்டும். கொள்வனவு நடவடிக்கைகளை

நாம் தற்போது ஆண்டின் நடுப்பகுதியைக் கடந்துள்ளோம். அபிவிருத்தி திட்ட வேலைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

யாழ். மாவட்டச் செயலக முன்றலில் காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், கௌரவ ஆளுநரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தனர்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று திங்கட் கிழமை (15.06.2026) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர். 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி இடம்பெயர்ந்த தமது மக்கள், 36 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் இன்னும் அகதிகளாகவே வாழ்ந்து வருவதாகத் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள மயிலிட்டி மீள்குடியேற்ற

யாழ். மாவட்டச் செயலக முன்றலில் காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், கௌரவ ஆளுநரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தனர். Read More »

பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். குற்றச் செயல்களைப் பொலிஸ் திணைக்களத்தால் மாத்திரம் தனித்துக் கட்டுப்படுத்திவிட முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார். 1966ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, கடந்த 60 ஆண்டுகளாகத் தற்காலிக இடங்களில் இயங்கிவந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கான புதிய நிரந்தரக் கட்டடம் இன்று (14.06.2026) ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாகத்

பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »

வடக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் தயாராகவுள்ளது. எனவே, அதற்கான கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். வடக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (12.06.2026) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், விளையாட்டு

வடக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது Read More »

இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் அவசர உட்கட்டமைப்பு அபிவிருத்தி, நிர்வாக ஒழுங்குபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் தொழிற்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், கிளிநொச்சி இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் மற்றும் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் அவசர உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்வாக ஒழுங்குபடுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (12.06.2026) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆளுநர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் தங்குமிட விடுதி கட்டுமான வேலைகளை இந்த ஆண்டு இறுதிக்குள்

இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் அவசர உட்கட்டமைப்பு அபிவிருத்தி, நிர்வாக ஒழுங்குபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (11.06.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. மாகாணத்திலுள்ள ஆதார மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்தல், சத்திரசிகிச்சைக் கூடங்களை நவீனமயப்படுத்தல், டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட நோயாளர் தரவு மையங்களை நிறுவுதல் மற்றும் உட்கட்டமைப்புத் திருத்த வேலைகளுக்காக ஆசிய

சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »