சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் நோர்வேத் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு, கௌரவ ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியது
நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகச் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை வரவேற்கின்றோம். இதனை வடக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் நோர்வேத் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (22.05.2026) வெள்ளிக்கிழமை காலை கௌரவ ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இச்சந்திப்பின்போது ஆளுநர் மேலும் […]
