ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் முதலீட்டுச் சூழல், சமூக நலன்புரி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஆளுநருடன் சர்வதேச நாணய நிதியக் குழு கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்கான தற்போதைய நிலைமை, முதலீடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் வாய்ப்புகள், ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், எதிர்நோக்கும் இடையூறுகள் மற்றும் தாமதங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியக் குழுவினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தனர். இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் ஏழாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக நாட்டுக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியக் குழுவினருக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (12.09.2026) […]

வடக்கு மாகாணத்தில் முதலீட்டுச் சூழல், சமூக நலன்புரி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஆளுநருடன் சர்வதேச நாணய நிதியக் குழு கலந்துரையாடல் Read More »

“உள்ளூராட்சி மன்றங்களைத் தரம் உயர்த்துவதும், புதிய மன்றங்களை உருவாக்குவதும் நிதி வல்லமையை உறுதி செய்த பின்னரே பரிசீலிக்கப்படும்” – அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன

வடக்கு மாகாணத்திலுள்ள சில பிரதேச சபைகளை நகர சபைகளாகத் தரம் உயர்த்துவது அல்லது இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ள சில பிரதேச சபைகளைப் பிரித்து புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவது தொடர்பில், அவற்றை எதிர்காலத்தில் வினைத்திறனுடன் நிர்வகிப்பதற்குத் தேவையான நிதி வல்லமை உறுதியாகக் காணப்படுமாயின், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியுடன் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி

“உள்ளூராட்சி மன்றங்களைத் தரம் உயர்த்துவதும், புதிய மன்றங்களை உருவாக்குவதும் நிதி வல்லமையை உறுதி செய்த பின்னரே பரிசீலிக்கப்படும்” – அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன Read More »

முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை; வடக்கு மாகாணத்துக்கு அடுத்த ஆண்டும் கூடுதல் நிதி ஒதுக்கீடு” – அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன.

வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு தேவையான ஆளணி மற்றும் நிதி வளங்களை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தும். குறிப்பாக, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணப்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, யாழ்ப்பாண மாவட்டத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வரும் உத்தியோகத்தர்களை குறுகிய காலத்துக்கு குறித்த மாவட்டங்களுக்கு இணைத்து சேவையாற்றச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அத்துடன், வடக்கு மாகாணத்துக்கு அடுத்த ஆண்டும் இவ்வாண்டைவிட கூடுதலான நிதி ஒதுக்கப்படும் என

முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை; வடக்கு மாகாணத்துக்கு அடுத்த ஆண்டும் கூடுதல் நிதி ஒதுக்கீடு” – அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன. Read More »

மாணவர்கள் கல்வி அறிவுடன் மட்டும் நின்று விடாது தலைமைத்துவ பண்பு மற்றும் பிறருக்காக பொறுப்பேற்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்

கல்வி அறிவை மட்டும் வழங்குவதால் ஒரு மனிதன் முழுமையடைவதில்லை, நல்ல குணம், தலைமைத்துவப் பண்பு மற்றும் பிறருக்காகப் பொறுப்பேற்கும் மனப்பான்மையுடன் மாணவர்கள் வளர வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா – 2026 இன் முதலாம் நாள் நிகழ்வு இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். 1926ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வட்டு

மாணவர்கள் கல்வி அறிவுடன் மட்டும் நின்று விடாது தலைமைத்துவ பண்பு மற்றும் பிறருக்காக பொறுப்பேற்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் Read More »

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக க. ஏகாந்தன் நியமனம்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராக க.ஏகாந்தன் அவர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் கலந்து கொண்டார். இவருக்கான நியமனம் எதிர்வரும் 14.09.2026 திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றிய பா.முகுந்தன் அவர்கள் மத்திய அரச சேவைக்கு

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக க. ஏகாந்தன் நியமனம் Read More »

கூட்டுறவுத்துறையை மீள வலுப்படுத்த அதிகாரிகளிடம் மனமாற்றம் அவசியம் – ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மீண்டும் வலுவான பொருளாதார சக்தியாகக் கட்டியெழுப்புவதற்கு, கூட்டுறவுச் சங்கங்களை நிர்வகிக்கும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் புதிய சிந்தனையும் மனமாற்றமும் ஏற்பட வேண்டும். அலுவலக மட்டத்திலிருந்து செயற்படுவதைக் கடந்து, களத்துக்குச் சென்று சங்கங்களின் உண்மையான தேவைகளை அறிந்து, அவற்றை உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் நவீன முகாமைத்துவத்துடன் இணைத்து அபிவிருத்தி செய்ய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (11.09.2026)

கூட்டுறவுத்துறையை மீள வலுப்படுத்த அதிகாரிகளிடம் மனமாற்றம் அவசியம் – ஆளுநர் Read More »

ஜனாதிபதி மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பயணம் – முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் எதிர்வரும் புதன்கிழமை (16.09.2026) மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின் போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத் தொகுதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரும்

ஜனாதிபதி மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பயணம் – முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் Read More »

கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் இயன்முறை மருத்துவச் சிகிச்சைப் பிரிவுடன் பல்வேறு மருத்துவ வசதிகளை உள்ளடக்கிய புதிய கட்டடம் – ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் தற்போது போதிய இடவசதியின்றி இயங்கி வரும் இயன்முறை மருத்துவச் சிகிச்சைப் பிரிவின் தேவையை நிவர்த்தி செய்வதுடன், எதிர்கால மருத்துவத் தேவைகளையும் கருத்திற்கொண்டு பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய புதிய கட்டடமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆராயப்பட்டது. கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் இயன்முறை மருத்துவச் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய புதிய கட்டடம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (10.09.2026) வியாழக்கிழமை

கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் இயன்முறை மருத்துவச் சிகிச்சைப் பிரிவுடன் பல்வேறு மருத்துவ வசதிகளை உள்ளடக்கிய புதிய கட்டடம் – ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண வீதி அபிவிருத்திப் பணிகளில் நிலவும் தொழில்நுட்ப ஆளணி பற்றாக்குறைக்கு விரைவான தீர்வு – அமைச்சர் மற்றும் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள வீதி உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவு செய்து, ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும் தரமாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு தடையாக உள்ள தொழில்நுட்ப ஆளணி பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் பல்வேறு நிதி மூலங்களின் கீழ் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணிகளில் நிலவும் தொழில்நுட்ப மற்றும் நடைமுறைச்

வடக்கு மாகாண வீதி அபிவிருத்திப் பணிகளில் நிலவும் தொழில்நுட்ப ஆளணி பற்றாக்குறைக்கு விரைவான தீர்வு – அமைச்சர் மற்றும் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் Read More »

கள் ஏற்றுமதியில் உள்ள இடையூறுகளை அகற்றி வெளிப்படையான நிரந்தரப் பொறிமுறையை உருவாக்கத் தீர்மானம்

கள் ஏற்றுமதியில் தற்போது நிலவும் இடையூறுகளை அகற்றி, எதிர்காலத்தில் வெளிப்படையானதும் நிரந்தரமானதுமான பொறிமுறையொன்றை உருவாக்குவதுடன், ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவை கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று (10.09.2026) வியாழக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. குறிப்பாக, காரைநகர் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின்

கள் ஏற்றுமதியில் உள்ள இடையூறுகளை அகற்றி வெளிப்படையான நிரந்தரப் பொறிமுறையை உருவாக்கத் தீர்மானம் Read More »