Balasingam Kajenderan

தவிசாளர்களும், செயலாளர்களும் ஒன்றுபட்டுச் செயற்படுவதன் ஊடாகவே அபிவிருத்தி சாத்தியமாகும். – கௌரவ ஆளுநர்

01.01.2026 இலிருந்து வடக்கு மாகாணம் முழுவதிலும் லஞ்ச் சீற் பாவனையை தடை செய்வது எனவும், பதிலீடாக வாழையிலையைப் பயன்படுத்துவது மற்றும் உணவுத்தட்டுக்களை கொதிக்க வைப்பது ஆகியவற்றை பின்பற்றலாம் என்றும் இது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றாத உள்ளூராட்சி மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றுவது எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ மேயர்கள், கௌரவ தவிசாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்திலுள்ள மாநகர சபைகளின் மேயர்கள், நகர […]

தவிசாளர்களும், செயலாளர்களும் ஒன்றுபட்டுச் செயற்படுவதன் ஊடாகவே அபிவிருத்தி சாத்தியமாகும். – கௌரவ ஆளுநர் Read More »

திட்டமிடல் பிரதிப் பிரதம செயலாளராக திருமதி ராஜினி ஜெயராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், வடக்கு மாகாண திட்டமிடல் பிரதிப் பிரதம செயலாளராக திருமதி ராஜினி ஜெயராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (07.10.2025) வழங்கி வைத்தார். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.

திட்டமிடல் பிரதிப் பிரதம செயலாளராக திருமதி ராஜினி ஜெயராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். Read More »

நிபந்தனைகளுடனேயே தொழில் நிலையங்களுக்கான அனுமதிகளை வழங்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அவை மீறப்படுகின்றபோது தொழில் நிலையங்களை மூடுவதற்கும் அதிகாரங்கள் உள்ளன – ஆளுநர்

எமது மாகாணத்திலுள்ள சிகை அலங்கரிப்பாளர்களும் தொழில்வாண்மை மிகுந்தவர்களாக தற்போதைய யுகத்துக்கு ஏற்றவர்களாக மாறவேண்டும். தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை (NAITA) அதனைச் செய்வதற்குத் தயாராக இருக்கின்றது. அதனைப் பயன்படுத்தி தேசிய தொழில்முறை தகுதிச் சான்றிதழை (NVQ) எல்லோரும் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ். மாவட்ட சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பொதுக்கூட்டம் தந்தைசெல்வா அரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (07.10.2025) நடைபெற்றது.

நிபந்தனைகளுடனேயே தொழில் நிலையங்களுக்கான அனுமதிகளை வழங்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அவை மீறப்படுகின்றபோது தொழில் நிலையங்களை மூடுவதற்கும் அதிகாரங்கள் உள்ளன – ஆளுநர் Read More »

யாழ். பல்கலைக்கழகம் என்பது வடக்கு மாகாணத்தின் செழுமையான கல்வி மரபை பிரதிபலிக்கும் உயிரோட்டமான சின்னமாகவும், பிராந்திய வளர்ச்சிக்கான இயக்க சக்தியாகவும் விளங்குகிறது. – கௌரவ ஆளுநர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது 50ஆண்டுகளில் அரைவாசிக் காலப் பகுதியை இங்கு மூண்டிருந்த போரினுள்ளேயே கழித்தது. மிகவுப் பயமான – மோசமான அந்தச் சூழலை எதிர்கொண்டு குறுகிய காலத்தில் இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு நிகராக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அப்படிப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவன் என்ற ரீதியில் நான் பெருமை கொள்கின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக 1974ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 6ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட

யாழ். பல்கலைக்கழகம் என்பது வடக்கு மாகாணத்தின் செழுமையான கல்வி மரபை பிரதிபலிக்கும் உயிரோட்டமான சின்னமாகவும், பிராந்திய வளர்ச்சிக்கான இயக்க சக்தியாகவும் விளங்குகிறது. – கௌரவ ஆளுநர் Read More »

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்று நம்புகின்றேன் – ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி செயற்படுத்தப்படும் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ் ‘குறிகாட்டுவான் இறங்குதுறைக்கான மறுசீரமைப்பு வீதிக்கட்டுமானத்தின்’ ஆரம்ப நிகழ்வும மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் முதல் தடவையாக எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு என்பன குறிகாட்டுவானில் இன்று சனிக்கிழமை காலை (04.10.2025) நடைபெற்றது. இங்கு உரையாற்றிய ஆளுநர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளருடன் கதைக்கும்போது அடிக்கடி ஓர் விடயத்தைக் கூறுவார். கௌரவ

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்று நம்புகின்றேன் – ஆளுநர் Read More »

போதைப்பொருளுக்கு அடிமையாவோருக்கு புனர்வாழ்வு வழங்கும் நிலையங்களை யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் அமைக்க தீர்மானம்.

வடக்கு மாகாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாவோருக்கு புனர்வாழ்வு வழங்கும் வகையில் புனர்வாழ்வு நிலையம் அமைத்தல் மற்றும் உதவிநாடும் நிலையம் (னுசழிpiபெ உநவெநச) அமைத்தல் தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் மீளாய்வு ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (02.10.2025) இடம்பெற்றது. தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகத்தின் பங்கேற்புடன் கடந்த ஜூலை மாதம் ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது. அதன்போது ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில்

போதைப்பொருளுக்கு அடிமையாவோருக்கு புனர்வாழ்வு வழங்கும் நிலையங்களை யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் அமைக்க தீர்மானம். Read More »

நாம் இயற்கையை வகைதொகையின்றி அழித்து வருவதால் காலநிலை மாற்றம் என்பது இன்று உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய சவாலாகிக்கொண்டு போகின்றது. – கௌரவ ஆளுநர்

பாடசாலை மாணவர்களுக்கு இளமையிலேயே இயற்கையை மதித்து – நேசித்து – பாதுகாக்கும் உணர்வை ஊட்டுவதன் ஊடாக எதிர்காலத்தில் இயற்கையை பேணிப்பாதுகாக்கும் சமூகமாக அவர்களை மாற்றும் திட்டத்தை இன்று ஆரம்பித்திருக்கின்றோம். இதைப் பாதுகாத்து எடுத்துச் சென்று அடுத்த தலைமுறையிடம் கையளிக்கும் பொறுப்பும் உங்களுக்கு உள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தூய்மை இலங்கை வேலைத் திட்டத்தின் கீழ், கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள்,

நாம் இயற்கையை வகைதொகையின்றி அழித்து வருவதால் காலநிலை மாற்றம் என்பது இன்று உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய சவாலாகிக்கொண்டு போகின்றது. – கௌரவ ஆளுநர் Read More »

கௌரவ ஆளுநருக்கும், ரஹமா நிறுவனத்தின் ஏற்பாட்டில் அழைத்து வரப்பட்ட சிறுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், ரஹமா நிறுவனத்தின் ஏற்பாட்டில் அழைத்து வரப்பட்ட சிறுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (01.10.2025) நடைபெற்றது. ரஹமா நிறுவனம் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் சிறுவர் உரிமை தொடர்பிலும் பணியாற்றி வருகின்றது. முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர் குழுக்களின் தலைவர்களே ஆளுநருடனான சந்திப்பில் ஈடுபட்டனர். போதைப்பொருள் பாவனையால் பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் சிறுவர்களால் ஆளுநருக்கு எடுத்துக்கூறப்பட்டது.

கௌரவ ஆளுநருக்கும், ரஹமா நிறுவனத்தின் ஏற்பாட்டில் அழைத்து வரப்பட்ட சிறுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. Read More »

இந்தியாவிலிருந்து வரும் அகதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக தீர்வு காண்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் அகதிகள் சர்வதேச விமான நிலையங்களில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸநாயகவுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வு காண்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு பிரதியிடப்பட்டு மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு, வடக்கு மாகாண ஆளுநரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக, போர்க்கால சூழ்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட துறைமுகம் மற்றும் மற்றும் முறையான கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தாமல், நாட்டை

இந்தியாவிலிருந்து வரும் அகதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக தீர்வு காண்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது. Read More »

ஆளுநர் செயலகத்தில் நவராத்திரி விழா

நவராத்திரி விழாவின் பத்தாம் நாள் நிகழ்வு, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (01.10.2025) நடைபெற்றது. ஆளுநர் செயலகப் பணியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.    

ஆளுநர் செயலகத்தில் நவராத்திரி விழா Read More »