வடக்கு மாகாண கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் – வட மாகாண அதிபர்கள் சங்கம், ஆளுநரிடம் உறுதி
வடக்கு மாகாண கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்வதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக வட மாகாண அதிபர்கள் சங்கம், மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் உறுதியளித்தனர். வட மாகாண அதிபர்கள் சங்கத்தின் தலைவர் த. ஜெயந்தன் தலைமையிலான குழுவினர் , யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்திற்கு வருகை தந்து இந்த உறுதியை வழங்கினர். வட மாகாணத்தில் அதிகரித்துள்ள பாடசாலை இடைவிலகல், பிரத்தியேக வகுப்புகளுக்கு அதிக நேரத்தை செலவிடுதல், இணை பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு குறைந்து […]