Balasingam Kajenderan

வடமாகாண தேசிய தைப்பொங்கல் விழா ஆளுநர் தலைமையில் பூநகரி ஜெயபுரம் பகுதியில் நடைபெற்றது

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாணத் தைப்பொங்கல் விழா தமிழர் மரபுகளின் படி வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (16.01.2024) நடைபெற்றது. கலாசார முறைப்படி வடமாகாண ஆளுநர் தலைமையில் பூநகரி ஜெயபுரம் நெல் வயலில் நெல் அறுவடையும் அதன் பின்னர் அதனை சூரியபகவானுக்கு அர்ப்பணிக்கும் பொங்கல் பொங்கும் நிகழ்வு ஜெயபுரம் அம்மன் ஆலயத்திலும் நடைபெற்றது. இதன் பின்னர் கலாசார கூறுகளுடன் கூடிய கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஆளுநர் […]

வடமாகாண தேசிய தைப்பொங்கல் விழா ஆளுநர் தலைமையில் பூநகரி ஜெயபுரம் பகுதியில் நடைபெற்றது Read More »

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிதிகளுடன் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிதிகளுடன் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவும் பங்கேற்றனர். நடன நிகழ்வுகளும் பொங்கல் விழாவை மெருகூட்டின.  

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிதிகளுடன் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் Read More »

நாட்டை கட்டியெழுப்ப தற்போதைய பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவது அவசியமானதாகும். – சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் (IMF) தெரிவிப்பு

நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்  குழு இன்று(14.01.2024) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு, வர்த்தகப் பிரதிநிதிகள், சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் பிரதிநிதிகள் என பலரும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர். சர்வதேச நாணய நிதியத்தை (IMF) பிரதிநிதித்துவப்படுத்தி, சிரேஷ்ட பிரதம அதிகாரி தலைமையில் நிரந்தர வதிவிட பிரதிநிதி, சிரேஷ்ட பொருளியலாளர், சிரேஷ்ட

நாட்டை கட்டியெழுப்ப தற்போதைய பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவது அவசியமானதாகும். – சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் (IMF) தெரிவிப்பு Read More »

நுளம்புக் குடம்பிகள் பெருகும் வகையில்சூழலை வைத்திருப்போருக்கு எதிராக பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு வடக்குமாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிலும் யாழ் பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளிலே நாளாந்தம் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். மாகாண டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 775 டெங்கு நோயாளர்கள் யாழ் மாவட்டத்தில்

நுளம்புக் குடம்பிகள் பெருகும் வகையில்சூழலை வைத்திருப்போருக்கு எதிராக பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு வடக்குமாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் உழவர் திருநாள் வாழ்த்துச் செய்தி

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் நெற்செய்கையில் ஈடுபடும் உழவர்களின் திருநாளாம் தைப்பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அகமகிழ்வடைகின்றேன். நெற்செய்கையில் ஈடுபடும் மக்கள் தமக்கு உதவிய இயற்கை தெய்வமாகிய சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் முகமாக பொங்கல் பொங்கி வழிபாடுகளை மேற்கொள்வது மரபு. அந்தவகையில், எமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நெற்செய்கை பாரிய பங்காற்றுகிறது என்பதில் எவ்வித ஐயமும்மில்லை. இயற்கை அனர்த்தங்களாலும், ஏனைய சில செயற்பாடுகளாலும் நெற்செய்கையில் ஈடுபடுவோர் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றமை கவலைக்குரியதே. எனினும், நாட்டு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் உழவர் திருநாள் வாழ்த்துச் செய்தி Read More »

மலக்கழிவகற்றும் பவுசர்களை ஜீ.பி.எஸ்.தொழினுட்பத்தினூடாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்அறிவுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் மலக்கழிவுகள் உரியவாறு அப்புறப்படுத்தாமையால் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களிடம், ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவங்களின் ஊடாக மலக்கழிவகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பவுசர்களில் நிரப்பிச் செல்லப்படும் மலக்கழிவை உரியவாறு அப்புறப்படுத்துவதில்லை எனவும் கௌரவ ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அண்மையில் இவை கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விடயங்களை கேட்டறிந்துக்

மலக்கழிவகற்றும் பவுசர்களை ஜீ.பி.எஸ்.தொழினுட்பத்தினூடாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்அறிவுறுத்தல் Read More »

பிரித்தானிய இளவரசி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் வரவேற்பு

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள  பிரித்தானிய இளவரசி ஆன் (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence)  உள்ளிட்ட குழுவினர் இன்று (11.01.2024) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். யாழ்ப்பாணம் நாவாந்துறை பொது மைதானத்தை வந்தடைந்த இளவரசி ஆன் உள்ளிட்ட குழுவினருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரித்தானிய இளவரசி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் வரவேற்பு Read More »

இந்திய துணைத்தூதுவர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை சந்தித்தார்

இந்திய துணைத்தூதுவர் திரு. ராகேஷ் நடராஜ் அவர்கள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றது. நாகபட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பித்தல், பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகள், சுற்றுலா துறை அபிவிருத்திகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.  

இந்திய துணைத்தூதுவர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை சந்தித்தார் Read More »

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை சந்தித்தார்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (10.01.2024) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. கனடாவிலிருந்து வருகைதரும் பலர் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றமை தொடர்பில் கௌரவ ஆளுநர் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். நாட்டில் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் பின்னர் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் என கௌரவ ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் வடக்கில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள  பசுமை

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை சந்தித்தார் Read More »

ஐந்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் இன்று (10.01.2024)  அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இந்த இணையதளங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. வேலணை, வலிகாமம் மேற்கு, நெடுந்தீவு, வடமராட்சி தெற்கு, மேற்கு ஆகிய  பிரதேச சபைகளுக்கும், பருத்தித்துறை நகர சபைக்குமான உத்தியோகப்பூர்வ இணைய தளங்களும் இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டன. மக்களுக்காக சேவை புரியக்கூடிய உள்ளுராட்சி நிறுவனங்கள் இவ்வாறு

ஐந்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் அங்குரார்ப்பணம் Read More »