சாவகச்சேரி சமுதாய அடிப்படை வங்கிக்குரிய காணி தொடர்பாக நீண்டகாலம் நிலவிவந்த இழுபறி நிலையில் கௌரவ ஆளுநர் நேரடியாகச் சென்று கலந்துரையாடல் நடத்தினார்.
சாவகச்சேரியில் சமுதாய அடிப்படை வங்கிக்குரிய காணி தொடர்பாக நீண்டகாலம் இழுபறி நிலவிவந்த நிலையில் அது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வியாழக்கிழமை காலை (31.07.2025) நேரடியாகச் சென்று தொடர்புடைய தரப்புக்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். சாவகச்சேரி நகர சபையின் சிறுவர் பூங்காவில் ஒரு பகுதிக் காணியை சமுதாய அடிப்படை வங்கிக்கு வழங்குவதாக கூறப்பட்டிருந்த நிலையில் அந்தக் காணியை ஆளுநர் முதலில் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். அந்தக் காணி சிறுவர் பூங்காவின் தொடர் அபிவிருத்திக்குத் […]
