Balasingam Kajenderan

மாகாண விளையாட்டு விழா – 2024  பளுதூக்கல் போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான பளுதூக்கல்  போட்டி கடந்த 2024.05.12 ஆம் திகதி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கத்தின் உள்ளக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணத்தைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். போட்டி அன்றைய தினம் காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி மாலை 7.30 மணியளவில் போட்டிகள் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான , பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன. மாகாண மட்டத்தில் ஆண்கள் அணி சார்பில் […]

மாகாண விளையாட்டு விழா – 2024  பளுதூக்கல் போட்டி Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 கராத்தே போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் கராத்தே போட்டி கடந்த 2024.05.11 ஆம் திகதி கிளிநொச்சியில் அமைந்துள்ள வடமாகாண விளையாட்டு கட்டிடத்தொகுதியின் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டி அன்றைய தினம் காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி மாலை 7.00 மணியளவில் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டு நிறைவு பெற்றது. ,ந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்விற்கு கிளிநொச்சி மாவட்ட செயலக பிரதம

மாகாண விளையாட்டு விழா – 2024 கராத்தே போட்டி Read More »

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டன

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி ) மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் ஆகியோர் கடந்த 07 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடியதற்கு  அமைவாக, இரண்டு வீதிகள் திறக்கப்பட்டுள்ளன. பொன்னாலை –  பருத்தித்துறை கடற்கரை வீதியில்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டன Read More »

இரு நூல்களின்  நூல் வெளியீட்டு வைபவம் -2024

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியீடு செய்யும் திரு. கணேசஐயர் சௌந்தரராஜன் அவர்களின் “யாழ்ப்பாணத் தமிழியல் ஆய்வடங்கல்” மற்றும் திரு. நவரத்தினம் பரமேஸ்வரன் அவர்களின் “யாழ்ப்பாண கச்சேரியின் வரலாறு” ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு வைபவமானது 2024.05.03 வெள்ளிக்கிழமை காலை 09.15 மணியளவில் கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் திருமதி.லாகினி நிருபராஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி,

இரு நூல்களின்  நூல் வெளியீட்டு வைபவம் -2024 Read More »

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதை அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும்,  இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் பாதுகாப்பு பிரிவினரிடம் நேற்று  (07/05/2024) தெரிவித்தார். ஒட்டகப்புலம் பகுதிக்கு  நேற்று விஜயம் செய்த கௌரவ ஆளுநர் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டத்துடன், காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார். யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி ) ஆகியோரும் இந்த சந்திப்பில்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதை அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது Read More »

மன்னார் பொது வைத்தியசாலைக்கு இந்திய அரசினால் 600 மில்லியன் ரூபா நன்கொடை

மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளது. மன்னார் பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டட நிர்மாண பணிகளுக்கும், மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்குமாக இந்த 600 மில்லியன் ரூபா நன்கொடை பயன்படுத்தப்படவுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின்  நெறிப்படுத்தலின் கீழ், மாகாண சபையால் திட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டு சுகாதார

மன்னார் பொது வைத்தியசாலைக்கு இந்திய அரசினால் 600 மில்லியன் ரூபா நன்கொடை Read More »

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையானஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர், கௌரவ ஆளுநரிடம் தெரிவிப்பு

இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (06/05/2024) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றங்கள், காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கல்வி, இயற்கை சக்தி வளங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலா வழிகாட்டிகள் போதிய எண்ணிக்கையில் இல்லை எனவும், 

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையானஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர், கௌரவ ஆளுநரிடம் தெரிவிப்பு Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 கயிறு இழுத்தல் போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான கயிறு இழுத்தல் போட்டி கடந்த 2024.05.05 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது. இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.தி. திரேஸ்குமார் அவர்கள், வவுனியா மாவட்டச் செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.ச. அரவிந்தன் மற்றும் விளையாட்டுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் வீரவீராங்கனைகளுக்கு கைலாகு கொடுத்து நிகழ்வினை ஆரம்பித்து

மாகாண விளையாட்டு விழா – 2024 கயிறு இழுத்தல் போட்டி Read More »

பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் மது போதைக்கு எதிரான இயக்கம் நேற்று  (05/05/2024) நடாத்திய விழிப்புணர்வுக் கருத்தரங்கின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மதுசாரம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், சவால்களும் என்ற தொனிப்பொருளில் இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை ஒரு சவாலான விடயமாக காணப்படுவதாக இதன்போது உரையாற்றிய வடக்கு

பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

யாழ் கோட்டையை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றால் போல மேம்படுத்த, புதிய திட்டங்களை வகுக்குமாறு கௌரவ ஆளுநர் பணிப்புரை

யாழ் நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக காணப்படும் கோட்டையை, சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். ஆளுநர் செயலகத்தில் நேற்று   (02/05/2024) நடைபெற்ற கூட்டத்தின் போதே கௌரவ ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்தார். யாழ் கோட்டையின் உட்புறம் மற்றும் வெளிப்புறச்  சூழலை, சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் அழகுபடுத்த தேவையான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் கௌரவ

யாழ் கோட்டையை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றால் போல மேம்படுத்த, புதிய திட்டங்களை வகுக்குமாறு கௌரவ ஆளுநர் பணிப்புரை Read More »