Balasingam Kajenderan

“இலங்கையில் பல பரிமாண பாதிப்புகளைப் புரிந்துகொள்வது” குறித்த கொள்கை அறிக்கை

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் (UNDP) ஏற்பாட்டில் நடைபெற்ற “இலங்கையில் பல பரிமாண பாதிப்புகளைப் புரிந்துகொள்வது” குறித்த கொள்கை அறிக்கை அமைப்பு குழுவில் வடமாகாண ஆளுநர் கெளரவ திருமதி பி.எஸ்.எம் சார்லஸ் பங்குபற்றியிருந்தார்.

“இலங்கையில் பல பரிமாண பாதிப்புகளைப் புரிந்துகொள்வது” குறித்த கொள்கை அறிக்கை Read More »

மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டிக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர்

கடந்த 25.08.2023 அன்று, 133 வது தொல்லியல் தினத்தினை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் சேவையாற்றும் அரச திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் அரச வங்கிகளுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டிக்கு பிரதம விருந்தினராக வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி P.S.M. சாள்ஸ் அவர்கள் கலந்துகொண்டு வீர வீராங்கனைகளுக்கான பரிசில்களை வழங்கிவைத்தார்.

மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டிக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வடக்கு பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக ஆளுநர் கலந்துரையாடல்

வடக்கு பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கை உள்வரும் சுற்றுலா நடத்துவோர் சங்கம் 31 ஆகஸ்ட் 2023 அன்று கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தது. கொழும்பில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

வடக்கு பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக ஆளுநர் கலந்துரையாடல் Read More »

வடமாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் – சுவிஸ் தூதரகத்தின் முதநிலைச் செயலாளர் தெரிவிப்பு.

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முதநிலைச் செயலாளர் திரு ஒலிவர் பிரஸ் (OLIVIER PRAZ) தெரிவித்துள்ளார். வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய வந்த அவர், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் 23.08.2023 அன்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் வடமாகாண மக்களின் பொதுவான

வடமாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் – சுவிஸ் தூதரகத்தின் முதநிலைச் செயலாளர் தெரிவிப்பு. Read More »

வடமாகாண மக்களின் வாழ்க்கை பற்றி அறிய அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம்

தற்போதைய வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை தாம் வழங்குவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி. ஜூலி ஜே சங் கூறினார். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் 23 ஆகஸ்ட் 2023 அன்று ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமெரிக்கத் தூதுவர் இவ்வாறு தெரிவித்தார். வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து தூதுவருக்கு விளக்கமளித்த ஆளுநர், மீள்

வடமாகாண மக்களின் வாழ்க்கை பற்றி அறிய அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம் Read More »

வடமாகாணத்தில் சேகரிக்கப்படும் பசுப்பால் ஏனைய மாகாணங்களுக்கு அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டு வடக்கிலேயே பால் சார் உற்பத்திகளை ஊக்குவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

வடமாகாணத்திலுள்ள மாவட்டங்களிலிருந்து நாளாந்தம் சேகரிக்கப்படும் 14,000 லீற்றர் பசுப்பால் ஏனைய மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுவரும் நிலையில், வடக்கில் பால் தொடர்பான உற்பத்திப்பொருட்களுக்கு பசுப்பாலை பயன்படுத்தும் வேலைத்திட்டத்தை வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது. வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் யாழ், இந்திய உயர்ஸ்தானிகர் திரு. சிறீ ராகேஷ் நட்ராஜ் உட்பட அரசாங்க அதிகாரிகள் மற்றும் வடக்கில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, கிராமியக்கைத்தொழில் தலைவர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும்,

வடமாகாணத்தில் சேகரிக்கப்படும் பசுப்பால் ஏனைய மாகாணங்களுக்கு அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டு வடக்கிலேயே பால் சார் உற்பத்திகளை ஊக்குவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். Read More »

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8306 மெற்றிக் தொன் இலவச யூரியா உரம். இதன் விலை 4.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

வட மாகாணத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் குருநாகல், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் உள்ள 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8360 மெற்றிக் தொன் யூரியா இரசாயன உரத்தை இலவசமாக விநியோகிக்கும் வேலைத்திட்டம் 10.08.2023 அன்று சாவகச்சேரி கமநல சேவை நிலையத்தில் ஆரம்பமானது. வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிட்கி தலைமையில் தொடக்க விழா நடைபெற்றது. இந்த திட்டம் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பால்

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8306 மெற்றிக் தொன் இலவச யூரியா உரம். இதன் விலை 4.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள். Read More »

வடமாகாண ஆடிப்பிறப்பு விழா 2023

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண ஆடிப்பிறப்பு விழாவானது 2023.07.17 (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் வடமாகாண கல்வி அமைச்சின் சரஸ்வதி சிலை முன்றலில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாணப் பிரதம செயலாளர் திரு.சமன் பந்துலசேன அவர்களும், சிறப்பு விருந்தினராக செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் (தலைவர், சிவபூமி அறக்கட்டளை, தெல்லிப்பளை துர்க்கா

வடமாகாண ஆடிப்பிறப்பு விழா 2023 Read More »