வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது
ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மக்களை அலைக்கழிப்பதை – பழிவாங்குவதை நிறுத்தாவிடின் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து தண்டனையை வழங்குவதைத்தவிர வேறுவழியில்லை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் எச்சரிக்கைவிடுத்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான ஏப்ரல் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 23.04.2025 அன்று புதன்கிழமை இடம்பெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றபோதும் இங்கு எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது மந்தமாக இருக்கின்றது. இதற்கும் […]
