Balasingam Kajenderan

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கூட்டுறவுத்துறை கௌரவ பிரதி அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தலைமையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் 26.03.2025 அன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரனின் அழைப்புக்கு அமைவாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார். கூட்டத்தில் தலைமையுரையாற்றிய பிரதி அமைச்சர், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலப்பகுதிக்குள் நிறைவுசெய்யுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்தார். கடந்த மாவட்ட […]

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது Read More »

வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோருவது என ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு, அடுத்த மாதம் 9ஆம் திகதி (09.04.2025) நடைபெறவுள்ள உயர்மட்டக் கலந்துரையாடலில் கோருவது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் 25.03.2025 அன்று செவ்வாய்க் கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வடக்கு மாகாணத்தில் மீள்குடியமர்வு, அபிவிருத்தி, விவசாயம், சுற்றுலாத்துறை என எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ள முடியாதளவுக்கு வனவளத் திணைக்களம் மற்றும்

வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோருவது என ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. Read More »

இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் ரமலான் அன்பளிப்புக்களை இஸ்லாமிய சகோதரர்களுக்கு வழங்கும் நிகழ்வு

இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் ரமலான் அன்பளிப்புக்களை இஸ்லாமிய சகோதரர்களுக்கு வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் 25.03.2025 அன்று செவ்வாய்க்கிழமை துணைத்தூதுவர் மாண்புமிகு சாய்முரளி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டு, அன்பளிப்புக்களை மக்களுக்கு அவர் வழங்கி வைத்தார்.    

இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் ரமலான் அன்பளிப்புக்களை இஸ்லாமிய சகோதரர்களுக்கு வழங்கும் நிகழ்வு Read More »

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கடற்றொழில் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகரன் தலைமையில் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25.03.2025) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் அழைப்புக்கு அமைவாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அமைச்சர் சந்திரசேகரன், அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக நிறைவுசெய்யுமாறு

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது Read More »

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கும் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 22.03.2025 அன்று சனிக்கிழமை

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Read More »

கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் 2024ஆம் ஆண்டு தரம் – 5 மாணவர்களின் ‘சிறகடிக்கும் சிட்டுக்கள் – 2024’ பாராட்டுதலும், பரிசில் வழங்குதலும் நிகழ்வு

தரம் – 1 மாணவர் அனுமதிக்காக என்னுடைய சிபாரிசைக்கோரி பலர் அணுகினார்கள். எவருக்கும் நான் சிபாரிசை வழங்கவில்லை. ஒருவருக்கு வழங்கினாலும், என்னை அணுகும் எல்லோருக்கும் வழங்கவேண்டிவரும். அது பாடசாலைகளின் நிர்வாகத்துக்கு தேவையற்ற தலையீடுகளுக்கு அனுமதித்துவிடும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயன் அவர்கள் தெரிவித்தார். கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் 2024ஆம் ஆண்டு தரம் – 5 மாணவர்களின் ‘சிறகடிக்கும் சிட்டுக்கள் – 2024’ பாராட்டுதலும், பரிசில் வழங்குதலும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் 22.03.2025 அன்று

கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் 2024ஆம் ஆண்டு தரம் – 5 மாணவர்களின் ‘சிறகடிக்கும் சிட்டுக்கள் – 2024’ பாராட்டுதலும், பரிசில் வழங்குதலும் நிகழ்வு Read More »

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான ‘கிளி முயற்சியாளர் சந்தை’ திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாணம் தொடர்ந்தும் எல்லாவற்றிலும் பின்தங்கிய நிலையில் இருக்க முடியாது. நாங்களும் முன்னேறவேண்டும். இங்குள்ள சிறுதொழில் முயற்சியாளர்கள் நீங்கள் முன்னேறி எமது மாகாணத்துக்கு பெருமையைத்தேடி தரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான ‘கிளி முயற்சியாளர் சந்தை’ 21.03.2025 அன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சந்தைக் கட்டடத்துக்கான நிதியுதவியை ஒபர் சிலோன் நிறுவனம் வழங்கியிருந்தது. சந்தையைத் திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய ஆளுநர்,

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான ‘கிளி முயற்சியாளர் சந்தை’ திறந்து வைக்கப்பட்டது. Read More »

மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட பதவிகளில் இருக்கும் சிலர் மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்குப் பதிலாக உபத்திரங்களையே செய்கின்றனர். – வடக்கு மாகாண ஆளுநர்

மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட பதவிகளில் இருக்கும் சிலர் மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்குப் பதிலாக உபத்திரங்களையே செய்கின்றனர். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கவலை வெளியிட்டார். புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில், சபை நிதியில் புதுக்குடியிருப்பு சந்தையினுள் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி மற்றும் உலக வங்கியின் நிதியில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி என்பனவற்றை ஆளுநர் திறந்து வைத்தார். அத்துடன் சந்தையினுள் மரக்கன்றும் நடுகை செய்தார். அதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு

மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட பதவிகளில் இருக்கும் சிலர் மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்குப் பதிலாக உபத்திரங்களையே செய்கின்றனர். – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வடக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் காணி ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை முன்வைத்தார்.

வடக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், காணி ஆணையாளர் நாயகம் சந்தனவிடம் கோரிக்கை முன்வைத்தார். வடக்கு மாகாண ஆளுநரின் அழைப்பின்பேரில் வருகை தந்துள்ள காணி ஆணையாளர் நாயகம் மற்றும் அவரது குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடமாடும் சேவையை முன்னெடுத்தனர். இதனைத்தொடர்ந்து மாகாண மட்டத்திலான பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் கிளிநொச்சியிலுள்ள வடக்கு மாகாண காணி

வடக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் காணி ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை முன்வைத்தார். Read More »

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையும், மக்களும் இணைந்த நிதிப்பங்களிப்பில் புனரமைக்கப்பட்ட கோவிற்சந்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு

மக்களின் நிதிப்பங்களிப்புடன் பிரதேச சபையும் இணைந்து இவ்வாறு சந்தை ஒன்றை அமைத்திருக்கும் செயற்பாடு இலங்கையில் வேறு எங்கும் நடைபெற்றதாக நான் அறியவில்லை. இந்த மக்கள் முன்மாதிரியாகச் செயற்பட்டிருக்கின்றார்கள். எதிர்காலத்தில் இதை முன்மாதிரியாகக்கொண்டு ஏனைய இடங்களில் இவ்வாறான அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை – கரவெட்டியும், மக்களும் இணைந்த நிதிப்பங்களிப்பில் புனரமைக்கப்பட்ட கோவிற்சந்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு சந்தை வளாகத்தில்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையும், மக்களும் இணைந்த நிதிப்பங்களிப்பில் புனரமைக்கப்பட்ட கோவிற்சந்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு Read More »