Balasingam Kajenderan

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் சேவைகளை விரிவாக்கி விரைவுபடுத்தவும் வேண்டும். – கௌரவ ஆளுநர்

தவறான விடயத்தை செய்து வந்தால் அதைத் தொடர்வதற்கே விரும்புகின்றனர். அதை மாற்றுவதற்கு பின்னடிக்கின்றனர். மாற்றத்தை எல்லோரும் ஒன்றிணைந்தாலே ஏற்படுத்த முடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள், செயலாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (22.10.2025) வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த ஆளுநர், காலத்துக்கு […]

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் சேவைகளை விரிவாக்கி விரைவுபடுத்தவும் வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

கௌரவ ஆளுநரை 51ஆவது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி சந்தித்து கலந்துரையாடினார்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, 51ஆவது காலாட் படைப்பிரிவின் தளபதியாக புதிதாகப் பதவியேற்ற மேஜர் ஜெனரல் ரிஸ்வி ரசிக், ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (22.10.2025) சந்தித்துக் கலந்துரையாடினார்.  

கௌரவ ஆளுநரை 51ஆவது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி சந்தித்து கலந்துரையாடினார் Read More »

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சாம்பசிவம் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சாம்பசிவம் சுதர்சன் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து கௌரவ ஆளுநர் அவர்கள் இன்று புதன்கிழமை காலை (22.10.2025) வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சாம்பசிவம் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். Read More »

சமூகத்துக்குச் சேவை செய்தவர்கள் அவர்கள் மறைந்த பின்னரும் அந்தச் சமூகத்தால் மதிப்பளிக்கப்படுவார்கள் – கௌரவ ஆளுநர்

சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்கள் சைவத்துக்கும் தமிழுக்கும் ஆற்றிய பணிகள் அளப்பரியது. அதற்கும் அப்பால் அவரது பண்புகள் மெச்சத்தக்கன. அதனால்தான் அவர் அமரராகிய பின்பும் எல்லோராலும் நினைவுகூரப்படுகின்றார். இத்தகையோரின் வாழ்வை இன்றைய இளையோருக்கும், அதிகாரிகளுக்கும் சொல்லிக்கொடுக்கவேண்டியிருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சைவப்புலவர் சு.செல்லத்துரை அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் அவரது நான்காவது ஆண்டு நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும், இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை (21.10.2025) அறக்கட்டளை நிதியத்தின்

சமூகத்துக்குச் சேவை செய்தவர்கள் அவர்கள் மறைந்த பின்னரும் அந்தச் சமூகத்தால் மதிப்பளிக்கப்படுவார்கள் – கௌரவ ஆளுநர் Read More »

யாழ். கோட்டையைச் சுற்றி எல்லைக் கற்கள் நடுகை செய்யும் பணி தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் கோட்டையைச் சுற்றி எல்லைக் கற்கள் நடுகை செய்யும் பணி தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (21.10.2025) நடைபெற்றது. தொல்பொருட் திணைக்களத்தால் எல்லைக் கற்கள் நடுகை செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அது நிறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் ஆராயப்பட்டது. தொல்பொருட் திணைக்களம், யாழ். மாநகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து எஞ்சிய எல்லைக் கற்களை

யாழ். கோட்டையைச் சுற்றி எல்லைக் கற்கள் நடுகை செய்யும் பணி தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

கௌரவ ஆளுநருக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21.10.2025) நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலான முன்மொழிவு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் ஆசிரிய ஆளணிச் சீராக்கம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. ஆசிரியர்கள் தொடர்பான தரவுகள் அதிகாரிகளிடம் இற்றைப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படாமை பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றது என்றும் ஆசிரிய சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றம் தொடர்பிலும்

கௌரவ ஆளுநருக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

ஒளியின் திருநாளாகிய தீபாவளி, இருளை அகற்றி ஒளியைப் பரப்பும் நல்வழியைக் குறிக்கின்றது. தீமையை வீழ்த்தி நன்மை வெற்றிபெறும் நினைவூட்டலாகவும், அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதி நிலவும் சமூகத்தை உருவாக்கும் ஊக்கமாகவும் இந்தப் பண்டிகை விளங்குகிறது. நம் மனத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் இருளை – அறியாமை – பொறாமை – தீமை அகற்றி ஒளியை அறிவு – அன்பு – நம்பிக்கை – பரப்பும் திருநாளாகும். இந்த இனிய நாளில், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நம்பிக்கையும் சந்தோஷமும் ஒளி வீசட்டும். வடக்கு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி Read More »

கிறீன் லேயர் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையை கௌரவ ஆளுநர் திறந்து வைத்தார்.

மரத்தை நடுகை செய்வது அதனைப் பராமரிப்பது என்பது கூட விசமிகளின் செயலால் எமது மாகாணத்தில் சவாலாகி வருகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தார். மரம் நடுகையைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் கிறீன் லேயர் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையை இன்று சனிக்கிழமை மாலை (18.10.2025) வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் திறந்து வைத்தார். அங்கு உரையாற்றிய ஆளுநர், கிறீன் லேயர் அமைப்பு மிகப் பெரிய வேலைத் திட்டத்தை எமது மாகாணத்தில் முன்னெடுத்து

கிறீன் லேயர் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையை கௌரவ ஆளுநர் திறந்து வைத்தார். Read More »

சிறுவர்களுக்கு உடல், உள ரீதியான தண்டனைகள் வழங்கப்படக்கூடாது. சிறுவர்களை அன்பாகப் போசித்தால் சிறப்பான நாட்டை உருவாக்க முடியும். – கௌரவ ஆளுநர்

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்கவேண்டும். பிள்ளைகளை இலக்கு வைத்து வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது. அதை உடைத்தெறிந்து அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவேண்டும். பிள்ளைகள் மீதான முதலீடு என்பது சிறப்பான எதிர்கால நாட்டுக்கான அடித்தளமாகும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு கிளிநொச்சி பாரதி ஸ்ரார் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை மாலை

சிறுவர்களுக்கு உடல், உள ரீதியான தண்டனைகள் வழங்கப்படக்கூடாது. சிறுவர்களை அன்பாகப் போசித்தால் சிறப்பான நாட்டை உருவாக்க முடியும். – கௌரவ ஆளுநர் Read More »

எமது முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களே எங்களது பண்பாடு. அதை நாம் எமது அடுத்த சந்ததியிடம் ஒப்படைக்கவேண்டும். – கௌரவ ஆளுநர்

மாணவர்கள் கல்விக்கு மேலதிகமாக தலைமைத்துவப் பண்பையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். கல்வியால் மாத்திரம் முழுமையடைந்து விட முடியாது. தலைமைத்துவப் பண்புமிருந்தால்தான் முழுமையடைய முடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகமும், புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டு பெருவிழாவின் அரங்க நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை காலை (18.10.2025) பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றது. அரங்க நிகழ்வுக்கு முன்னதாக 40 இற்கும் மேற்பட்ட பண்பாட்டு ஊர்திகளின் பவனிகள் நடைபெற்றிருந்தன. அரங்க

எமது முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களே எங்களது பண்பாடு. அதை நாம் எமது அடுத்த சந்ததியிடம் ஒப்படைக்கவேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »