நாம் இயற்கையை வகைதொகையின்றி அழித்து வருவதால் காலநிலை மாற்றம் என்பது இன்று உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய சவாலாகிக்கொண்டு போகின்றது. – கௌரவ ஆளுநர்
பாடசாலை மாணவர்களுக்கு இளமையிலேயே இயற்கையை மதித்து – நேசித்து – பாதுகாக்கும் உணர்வை ஊட்டுவதன் ஊடாக எதிர்காலத்தில் இயற்கையை பேணிப்பாதுகாக்கும் சமூகமாக அவர்களை மாற்றும் திட்டத்தை இன்று ஆரம்பித்திருக்கின்றோம். இதைப் பாதுகாத்து எடுத்துச் சென்று அடுத்த தலைமுறையிடம் கையளிக்கும் பொறுப்பும் உங்களுக்கு உள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தூய்மை இலங்கை வேலைத் திட்டத்தின் கீழ், கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், […]