பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை என்றபோதும் எங்களுக்குரிய தனித்துவங்களை கைவிட முடியாது. – கௌரவ ஆளுநர்
அடுத்த தலைமுறைக்கு எமது தனித்துவமான பண்பாடு, கலாசாரத்தைக் கையளிப்பதற்று இவ்வாறான பண்பாட்டுப் பெருவிழாக்கள் தேவையாக இருக்கின்றன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட பண்பாட்டு பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டுப் பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை (24.10.2025), கிளிநொச்சி மாவட்டச் செயலரும், மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான சு.முரளிதரன் தலைமையில், இரனைமடு தாமரைத் தடாகம் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம […]
