கைப்பேசிக்கு அடிமையாகும் மாணவர்கள், இளம் பிள்ளைகளால் பல்வேறு பிரச்சினைகள் தினம் தினம் உருவாகின்றன. – கௌரவ ஆளுநர்
மாற்றுத்திறனாளிகளுக்கு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் திட்டங்களை முன்வைத்தாலும் அதற்கும் நிதி ஒதுக்குவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. எனவே, அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து பொதுவேலைத் திட்டத்தை வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் (JSAC) ஏற்பாட்டில், இணைந்து ஒளிரும் மலர்கள் (Inclusive Talent Show) நிகழ்வு கொடிகாமம் நட்சத்திர மஹாலில் இன்று செவ்வாய்க்கிழமை (11.11.2025) நடைபெற்றது. […]
