மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான அனைத்து உறுப்பினர்களுக்கும், கௌரவ ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் புனரமைக்கப்பட வேண்டிய வீதிகளின் பட்டியலை முன்னுரிமைப்படுத்துமாறும் கிடைக்கப்பெறுகின்ற நிதிகளுக்கு ஏற்ப அவற்றை படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் புனரமைக்கலாம் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி இராசையா நளினி தலைமையிலான பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (17.10.2025) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் […]
