தனிநபர் ஒவ்வொருவரிலிருந்தும் மாற்றம் ஆரம்பிக்கப்படவேண்டும். இதுவே ‘தூய்மை இலங்கை’ என்ற திட்டத்தின் அடிநாதமாகும் – கௌரவ ஆளுநர்
சட்டத்தை மதிக்கின்ற சமூகமாக நாங்கள் மாறவேண்டும். தனிநபர் ஒவ்வொருவரிலிருந்தும் மாற்றம் ஆரம்பிக்கப்படவேண்டும். அதுவே ‘தூய்மை இலங்கை’ என்ற திட்டத்தின் அடிநாதமாக இருக்கின்றது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘தூய்மை இலங்கை’ (Clean Srilanka) எண்ணக் கருவை ஊக்குவிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் – நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவுடன் இணைந்ததாக ‘இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு’ என்ற தொனிப்பொருளில் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக ஜனாதிபதி செயலகம், வடக்கு […]
