இந்தப் பாடசாலையில் கல்விகற்று பல்கலைக்கழகத்துச் செல்லும் மாணவர்கள், இந்தக் கிராமத்தை அபிவிருத்தி செய்யவேண்டும். அதன் ஊடாகவே இந்தப் பிரதேசங்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் எல்லையோர கிராமத்திலுள்ள இரணை இலுப்பைக்குளம் அ.த.க. பாடசாலை ‘தரம் 1 சி’ ஆக தரம் உயர்த்தப்பட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று புதன்கிழமை (19.02.2025) பாடசாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார். பாடசாலையின் அதிபர் ந.கோபு தனது தலைமை உரையில், பாடசாலையின் தேவைப்பாடுகளை முன்வைத்ததுடன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 118 ஆண்டுகளின் பின்னர் கல்விப்பொதுத்தராதர உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு வாய்ப்புக்கள் கிடைத்துள்ளமையும் சுட்டிக்காட்டினார். அதேபோன்று தற்போது உயர்தர வகுப்பில் […]