“பல்கலைக்கழகத்தின் துணையுடன் வடக்கின் விவசாயத்துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவோம்!” – கிளிநொச்சி விவசாய பீடக் கலந்துரையாடலில் ஆளுநர் அழைப்பு
வடக்கு மாகாணத்தில் நிலைத்து நிற்கக்கூடிய விவசாய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும், அத்துறையின் மேம்பாட்டுக்கும் பல்கலைக்கழகங்கள் எமது திணைக்களங்களுக்குத் தோள் கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறான கூட்டு முயற்சியின் ஊடாக, எதிர்காலத்தில் எமது மாகாணத்தின் விவசாயத் துறையில் சிறப்பானதொரு வளர்ச்சியை எட்ட முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன் என்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள விவசாய பீடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02.01.2025), பீடாதிபதி பேராசிரியர் கே.பகீரதன் தலைமையில் நடைபெற்ற […]
