மணல் பெறக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தல், சேகரித்தல் மற்றும் விநியோகித்தல் ஆகிய பொறிமுறைகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முன்னுரிமை
கிளிநொச்சியிலிருந்து புதிய பொறிமுறையூடாக ஒரு மாத காலத்தினுள் மணல் விநியோகத்தை ஆரம்பித்தல் மற்றும் மணலின் விலையை அரைவாசியாகக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் கிளிநொச்சி மாவட்ட மணல் மற்றும் கிரவல் விநியோகக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மற்றும் தூய்மை இலங்கை செயலணியின் மாகாண இணைப்பாளரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகரின் பிரதிநிதியுமான சு.கபிலன் ஆகியோரின் விசேட பங்கேற்புடன், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் தலைமையில் […]
