Balasingam Kajenderan

பனை உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக எமது நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கப்பெற்று வருகின்றது. – கௌரவ ஆளுநர்

பனை உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக எமது நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கப்பெற்று வருகின்றது. எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி பொறிமுறையை இலகுவாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதன் ஊடாக இடைத்தரகர்களை விட உற்பத்தியாளர்களே அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் […]

பனை உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக எமது நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கப்பெற்று வருகின்றது. – கௌரவ ஆளுநர் Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் பொன்னையா குகதாசன் தலைமையிலான குழுவினர் ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட் கிழமை மாலை (21.07.2025) சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பில் ஆதன மதிப்பீடு மேற்கொண்டு வரி அறவிடுவதற்கான ஒத்துழைப்புக்கள் மற்றும் சபையின் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கைகளை ஆளுநரிடம் முன்வைத்தனர். மேலும், சபையின் இரண்டு உப அலுவலகங்கள் தனியார் கட்டடங்களில் இயங்கி வரும் நிலையில் அதனை அமைத்துத் தருவதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கும் கோரிக்கை

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர். Read More »

இன்று வசதிபடைத்தோரும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் துரித உணவுகளால் இந்தப் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். – கௌரவ ஆளுநர்

தெல்லிப்பளை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், தாய்மார் கழகங்கள் இணைந்து நடத்திய இளையோர் சுகநலக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நடை பவனிக்கும் என்பன வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் இன்று திங்கட் கிழமை (21.07.2025) நடைபெற்றது. தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் கவிஞர் அம்பி கலையரங்கில் மேடை நிகழ்வுகள் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பரா.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில்,

இன்று வசதிபடைத்தோரும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் துரித உணவுகளால் இந்தப் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். – கௌரவ ஆளுநர் Read More »

பிரபல சைக்கிளோட்ட வீரர் அமரர் அகஸ்ரின் ஞாபகார்த்த மாபெரும் சைக்கிளோட்டப் போட்டி – 2025 இன் பரிசளிப்பு நிகழ்வு

இன்றைய காலத்தில் தங்கள் தேவைக்கு துவிச்சக்கரவண்டியைப் பயன்படுத்துபவர்களைவிட தேகாரோக்கியத்துக்காக பயன்படுத்துபவர்களே அதிகம். இன்றைய இளைய சமூகத்திடம் துவிச்சக்கரவண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். பிரபல சைக்கிளோட்ட வீரர் அமரர் அகஸ்ரின் ஞாபகார்த்த மாபெரும் சைக்கிளோட்டப் போட்டி – 2025 இன் பரிசளிப்பு நிகழ்வு, சிரேஷ்ட வெளிநாட்டுச்சேவை உத்தியோகத்தர் அகஸ்ரின் கிறிஸ்ரிரூபன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை (19.07.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில்

பிரபல சைக்கிளோட்ட வீரர் அமரர் அகஸ்ரின் ஞாபகார்த்த மாபெரும் சைக்கிளோட்டப் போட்டி – 2025 இன் பரிசளிப்பு நிகழ்வு Read More »

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவறம் பூண்ட நூற்றாண்டு விழா

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவறம் பூண்ட நூற்றாண்டு விழா நிகழ்வுகள் புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ். மாவட்டச் செயலகம், யாழ்ப்பாண பிரதேச செயலகம், அகில இலங்கை இந்துமா மன்றம் மற்றும் யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து மானிப்பாயில் விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது மகா சமாதி தினமான இன்று சனிக்கிழமை (19.07.2025) நடத்தின. மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்று

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவறம் பூண்ட நூற்றாண்டு விழா Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் சந்தித்துக் கலந்துரையாடினார்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன், ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18.07.2025) சந்தித்துக் கலந்துரையாடினார். புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் மனுக் கையளித்ததுடன், சபையில் வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமை தொடர்பிலும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினார். இயலுமான வரையில் சபைக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக ஆளுநர் இதன்போது பதிலளித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் சந்தித்துக் கலந்துரையாடினார் Read More »

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களை வடமாகாணத்தவர்கள் பயன்படுத்துவது மிகக் குறைவாக உள்ளது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக உள்ளது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும். தொழில் கல்வியின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் இ.திருமுருகன் தலைமையில் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை மாலை (17.07.2025) இடம்பெற்ற சான்றிதழ்

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களை வடமாகாணத்தவர்கள் பயன்படுத்துவது மிகக் குறைவாக உள்ளது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

வடக்கு மாகாணத்துக்கு கடந்த ஆண்டுகளை விட 3 மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை விரைந்து – வினைத்திறனாக செலவு செய்து முடிக்கவேண்டும். – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சில தொழில்துறைக்கான ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி நேற்று கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் விரைவில் அவை நிரப்பப்படும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (17.07.2025) கடற்றொழில், நீரியல்வளங்கள் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இ.சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றது.

வடக்கு மாகாணத்துக்கு கடந்த ஆண்டுகளை விட 3 மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை விரைந்து – வினைத்திறனாக செலவு செய்து முடிக்கவேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

விவசாய அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது

வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (16.07.2025) நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், விவசாயிகளை எதிர்காலத்தில் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பயிர்ச்செய்கையை நோக்கி நகர்த்த வேண்டும்

விவசாய அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது Read More »

உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது

நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (16.07.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட

உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது Read More »