Balasingam Kajenderan

அடுத்த 5 ஆண்டுகளில், வடக்கு மாகாணம் நெறிமுறைசார்ந்த கடலட்டை வளர்ப்பில் உலகளாவிய முதன்மையிடத்துக்கு வரும் என நம்புகிறேன் – கௌரவ ஆளுநர்

கடலட்டை உற்பத்தியை அதிகரிப்பதை மாத்திரம் நாம் இலக்காகக் கொண்டு செயற்பட்டாலோ அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளை அனுமதித்தாலோ கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் நுட்பமான சமநிலையை சீர்குலையும். நாம் எமது சுற்றுச்சூழல் நிலைத்து நீடித்து நிற்கக்கூடிய வகையில் செயலாற்றவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சினமன்குளோபல் நிறுவனமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய கடலட்டை உற்பத்தி தொடர்பான கருத்தரங்கு ‘நோர்த் ஹேட் ஹொட்டலில்’ இன்று சனிக்கிழமை காலை (26.07.2025) நடைபெற்றது. இங்கு தொடக்கவுரையாற்றிய ஆளுநர், […]

அடுத்த 5 ஆண்டுகளில், வடக்கு மாகாணம் நெறிமுறைசார்ந்த கடலட்டை வளர்ப்பில் உலகளாவிய முதன்மையிடத்துக்கு வரும் என நம்புகிறேன் – கௌரவ ஆளுநர் Read More »

UNDP ஆல் நடத்தப்படும் வடக்கு மாகாண சுற்றுலாத் தேவைகளின் மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தால் (UNDP) நடத்தப்படும் வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் தேவைகள் மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (25.07.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணம் சுற்றுலாத்துறைக்கு பொருத்தமான இடம். பல முதலீட்டாளர்கள் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்காக வருகின்றனர். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக உலக வங்கி உட்கட்டுமான அபிவிருத்திகளுக்கு எங்களுக்கு உதவ இருக்கின்றது. வெளிவிவகார வளத்திணைக்களம்

UNDP ஆல் நடத்தப்படும் வடக்கு மாகாண சுற்றுலாத் தேவைகளின் மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படும் திகதி பிற்போடப்பட்டது

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள், நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்தும், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் உள்ளூர் சேவைகள் தற்போது இலங்கை போக்குவரத்துச் சபை செயற்படும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும் மேற்கொள்வது என்று, எடுக்கப்பட்ட முடிவு நடைமுறைப்படுத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படும் திகதி பிற்போடப்பட்டது Read More »

கௌரவ ஆளுநரை துணுக்காய், மாந்தை கிழக்கு மற்றும் வலி. கிழக்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேச சபைகளின் தவிசாளர்களும், யாழ்ப்பாண மாவட்டத்தின் வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளரும் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (24.07.2025) சந்தித்துக் கலந்துரையாடினர். துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் க.செந்தூரன், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி இராசையா நளினி ஆகியோருடன் சபையின் உறுப்பினர்களும் பங்கேற்றனர். தமது பிரதேசங்களில் பல்வேறு வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய நிலையில் ஒதுக்கப்படும் நிதி

கௌரவ ஆளுநரை துணுக்காய், மாந்தை கிழக்கு மற்றும் வலி. கிழக்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர். Read More »

மகளிர் விவகார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன் கிழமை (23.07.2025) நடைபெற்றது. மகளிர் விவகார அமைச்சு, சமூகசேவைகள் திணைக்களம், தொழிற்றுறை திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம்,

மகளிர் விவகார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

பொதியிடல் தொடர்பான தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அறிவூட்டும் யுனிடோ நிறுவனத்துக்கு நன்றிகள் – கௌரவ ஆளுநர்

தரமான பொருட்களை உற்பத்தி செய்தாலும், அதனைப் பொதியிடுவது சந்தைப்படுத்துவதிலேயே அந்தப் பொருட்களுக்கான கேள்வி தங்கியுள்ளது. எனவே, இவை தொடர்பான தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பிலும் உங்களை அறிவூட்டும் யுனிடோ நிறுவனத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஐ.நா.வின் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (யுனிடோ) ஏற்பாட்டில் உள்ளூர் தொழில்முயற்சியாளர்களுக்னான பயிற்சிப்பட்டறை திண்ணை ஹோட்டலில் இன்று புதன்கிழமை (23.07.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

பொதியிடல் தொடர்பான தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அறிவூட்டும் யுனிடோ நிறுவனத்துக்கு நன்றிகள் – கௌரவ ஆளுநர் Read More »

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில் வசிப்போரில் ஒரு தொகுதியினருக்கான உறுதிப் பத்திரங்கள் அடுத்த மாதம் வழங்கப்படும்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் அழைப்பின்பேரில் வருகை தந்த, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே.நிஹாலின் பங்கேற்புடன், வடக்கு மாகாணத்திலுள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்று புதன்கிழமை காலை (23.07.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்வுகள் காணப்பட்டன. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர்கள் –

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில் வசிப்போரில் ஒரு தொகுதியினருக்கான உறுதிப் பத்திரங்கள் அடுத்த மாதம் வழங்கப்படும் Read More »

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படும்

யாழ்ப்பாணம் நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தைச் செயற்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடலில், எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து (01.08.2025) இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்தும், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் உள்ளூர் சேவைகள் தற்போது இலங்கை போக்குவரத்துச் சபை செயற்படும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும் மேற்கொள்வது என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவித்தார். இதைச் செயற்படுத்தும் அதேநேரம் இதனால் எழக்கூடிய

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படும் Read More »

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி ஆகப் பணியாற்றி ஓய்வுபெறும் எஸ்.குகதாஸ் அவர்களின் பிரிவுபசார விழா

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி ஆகப் பணியாற்றி ஓய்வுபெறும் எஸ்.குகதாஸ் அவர்களின் பிரிவுபசார விழா வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை (22.07.2025) இடம்பெற்றது. விழாநாயகனுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்த ஆளுநர் இங்கு உரையாற்றுகையில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலராக தான் பணியாற்றிய காலத்தில் குகதாஸ் அவர்கள் அங்கு கடமைபுரிந்ததை நினைவுகூர்ந்தார். எப்போதும் நேர்ச்சிந்தனையுடன்

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி ஆகப் பணியாற்றி ஓய்வுபெறும் எஸ்.குகதாஸ் அவர்களின் பிரிவுபசார விழா Read More »

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒருபோதும் யாருக்காகவும் நிறுத்தவேண்டாம் – கௌரவ ஆளுநர்

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் உள்ளூராட்சிமன்றங்களை முன்னெடுக்குமாறும் அதை ஒருபோதும் யாருக்காகவும் நிறுத்தவேண்டாம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22.07.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், சில உள்ளூராட்சிமன்றங்களின் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மக்களுக்கான அமைப்பே உள்ளூராட்சிமன்றம் என்பதை நினைவிலிருத்திச் செயற்படவேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், சோலைவரி மாற்றம், கட்டட அனுமதி

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒருபோதும் யாருக்காகவும் நிறுத்தவேண்டாம் – கௌரவ ஆளுநர் Read More »