டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் யாழ் பொதுநூலகத்தினை இணைக்கும் அங்குராப்பண நிகழ்வு ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் இன்று திங்கட்கிழமை மதியம் (01.09.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாண்புமிகு ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாநகர சபையின் கௌரவ மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா ஆகியோரால் வரவேற்கப்பட்டனர். அதனைத் […]
