Kathir Sadagopan

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவு முன்னெடுத்த சர்வதேச மண் தினம் – 2023

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவு முன்னெடுத்த சர்வதேச மண் தினம் – 2023 நிகழ்வு சர்வதேச மண் தினமான 05.12.2023 செவ்வாய்க்கிழமை திருநெல்வேலியிலுள்ள யாழ் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ தலைமையில் நடைபெற்ற மண்தின நிகழ்வின்போது விவசாய அமைச்சினால் அறுவடை சஞ்சிகை வெளியிடப்பட்டதோடு சர்வதேச மண்தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. […]

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவு முன்னெடுத்த சர்வதேச மண் தினம் – 2023 Read More »

இலங்கையின் பொதுநிதிக்கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட (APFASL ) சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கும் விழா -2023

இலங்கையின் பொதுநிதிக்கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கும் நிகழ்வானது 04.12.2023 திங்கட்கிழமை அன்று கொழும்பு BMICH இன் தாமரை மண்டபத்தில் இடம்பெற்றது. 2022 ஆம் ஆண்டின் நிதிக்கணக்குகளை அடிப்படையாகக் கொண்ட இப் போட்டியானது தேசத்தில் பொது நிதிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு பங்களித்து, நிதி அறிக்கையிடலின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கு இலங்கையின் பொதுத்துறை நிறுவனங்களின் அர்ப்பணிப்புக்கான சான்றாக விளங்கும் இவ் விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பொதுநிர்வாக,

இலங்கையின் பொதுநிதிக்கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட (APFASL ) சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கும் விழா -2023 Read More »

FARM TO GATE – வடக்கு மாகாண விவசாய, உற்பத்தியாளர்களுக்கு இணையத்தள சந்தைவாய்ப்பை அறிமுகப்படுத்த நடவடிக்கை

வடக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வோர், உற்பத்திகளுக்கான நியாயமான விலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் FARM TO GATE என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பணிப்புரைக்கு அமைய FARM TO GATE செயலிக்கான மென்பொருள் வடிவமைப்பு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு தை மாதம் FARM TO GATE செயலியை அங்குரார்ப்பணம் செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. FARM TO GATE

FARM TO GATE – வடக்கு மாகாண விவசாய, உற்பத்தியாளர்களுக்கு இணையத்தள சந்தைவாய்ப்பை அறிமுகப்படுத்த நடவடிக்கை Read More »

வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்களின் இரங்கல் செய்தி

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் பாசமிகு தாயார் திருமதி.மேரி ஜோசபின் அமிர்தரத்தினம் 21.11.2023 அன்று தனது 93வது வயதில் கொழும்பில் இயற்கை எய்தினார். அன்னாரது மறைவையொற்றி வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், நிறைவேற்று அதிகாரிகள், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் சார்பில் எமது ஆழ்ந்த இதயபூர்வமான அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம். மேலும் அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். பிரதம

வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்களின் இரங்கல் செய்தி Read More »

மொழிக்கொள்கை அமுலாக்கம் மற்றும் மொழித்திட்டம் தயாரித்தல் தொடர்பான செயலமர்வு

அரசகரும மொழிக்கொள்கையை வடக்கு மாகாணசபை அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக வடக்கு மாகாணசபை உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் கூடிய செயலமர்வானது 14.11.2023 அன்று பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், பிரதிப்பிரதம செயலாளர்கள், உதவிப்பிரதம செயலாளர் மற்றும் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகின் பணிப்பாளர், தேசிய மொழிப் பிரிவின் மாகாண அலுவலக பொறுப்பாளர், சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், சகல திணைக்களத்தின் தலைவர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், பயிற்சியாளர்கள், விடய உத்தியோகத்தர்கள் என

மொழிக்கொள்கை அமுலாக்கம் மற்றும் மொழித்திட்டம் தயாரித்தல் தொடர்பான செயலமர்வு Read More »

வடமாகாண சபையின் கார்த்திகை மாதத்திற்கான மரநடுகை நிகழ்வு – 2023

கார்த்திகை மாதமாகிய மரநடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் ஒழுங்கமைப்பில் மரநடுகை நிகழ்வானது 09.11.2023 அன்று வியாழக்கிழமை வடக்கு மாகாணசபையின் உட்புறம் மற்றும் வெளிப்புற வளாகங்களில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம செயலாளர் உட்பட உதவிப்பிரதம செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், ஏனைய பிரதம செயலாளர் செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடுகை செய்திருந்தார்கள். இம் மரநடுகை நிகழ்வில் வளாகத்தின் வெளிப்புற சுற்றுச்சூழலில் நீண்டகாலம் பயன்தரக்கூடிய புங்கை மரங்களும் சவுக்கு மரங்களும்

வடமாகாண சபையின் கார்த்திகை மாதத்திற்கான மரநடுகை நிகழ்வு – 2023 Read More »

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்திய நிதி அமைச்சர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று (03) இந்தியாவிற்குப் பயணமானார். யாழ்ப்பாணத்தில் நடைபெறும் புதிய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு வர்த்தக கண்காட்சியை இந்திய நிதியமைச்சர் பார்வையிட்டார். வடமாகாண கெளரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு நிதியமைச்சரை  சந்தித்தார். அதன் பின்னர் யாழ். நூலகம் மற்றும் நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் செய்த இந்திய நிதியமைச்சர் பின்னர் இந்திய ஸ்டேட்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்திய நிதி அமைச்சர் Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் 2023 கிளிநொச்சியில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 18.10.2023 அன்று கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் திணைக்களத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ஆறு பயனாளிகளுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏழு பயனாளிகளுக்கும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தலா ஒவ்வொரு பயனாளிகளுக்குமாக மொத்தமாக 15

கிளிநொச்சி மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு Read More »

வயல் விழா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் வட்டக்கச்சி

‘சவால்களுக்கு மத்தியில் தன்னிறைவான உணவு உற்பத்தியை நோக்கி’ எனும் தொனிப்பொருளிலான வயல்விழா நிகழ்வு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம், வட்டக்கச்சியில் 05.10.2023 அன்று கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சூ.ஜெகதீஸ்வரி தலைமையில் வெகு விமர்சியாக இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம் சமன் பந்துலசேன அவர்களும்,சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மரியதாசன் ஜெகூ,

வயல் விழா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் வட்டக்கச்சி Read More »

நெடுந்தீவு மண்ணில் வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் சிறுவர் தினக் கொண்டாட்டம் 2023

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு வடமாகாண பிரதம செயலாளரின் தலைமையில் சிறுவர் தினக் கொண்டாட்டமானது 08.10.2023 அன்று காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு பிரதேச சபையின் தேவா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. நெடுந்தீவின் ஏழு முன்பள்ளிகளைக் கொண்ட 137 சிறுவர் சிறுமியர்கள் கலந்து சிறப்பித்திருந்த இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணத்தின் பிரதம செயலாளர் மற்றும் அவரது பாரியார், தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி நிர்வாகம்), தீவக வலய முன்பள்ளி உதவிக் கல்வி பணிப்பாளர்,

நெடுந்தீவு மண்ணில் வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் சிறுவர் தினக் கொண்டாட்டம் 2023 Read More »