பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, மாண்புமிகு ஜனாதிபதி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (02.09.2025) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார். வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன இணைந்து இதனை நிறுவியுள்ளன. சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது இன்று திறந்து வைக்கப்பட்டது. […]
