இன்றைய மாணவர்களை கல்வியில் மாத்திரமே கவனம் செலுத்துமாறு பெற்றோர் நிர்ப்பந்திக்கின்றனர்; கல்விக்கு அப்பால் கலையும் விளையாட்டும் மாணவர்களுக்கு இன்றியமையாதது. – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இன்றைய மாணவர்கள் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர். கல்வியில் மாத்திரமே கவனம் செலுத்துமாறு பெற்றோர்கள் அவர்களை நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால், கல்விக்கு அப்பால் கலையும் விளையாட்டும் மாணவர்களுக்கு இன்றியமையாதது. வடக்கு மாகாணம் முன்னரைப்போன்று கல்வி, விளையாட்டு மற்றும் கலை ஆகிய துறைகளில் மீண்டும் உன்னத நிலையை அடைய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டுக் […]
