பாடசாலை மாணவர்களிடம் மறைமுகமான நிதி அறவீடுகளைக் கண்காணித்து நிறுத்த வேண்டிய பொறுப்பு கல்வி நிர்வாக அதிகாரிகளையே சாரும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
பாடசாலைகளில் மாணவர்களிடம் நிதி சேகரிக்கக் கூடாது என இறுக்கமான சுற்றறிக்கை உள்ளபோதும், பெற்றோர் அல்லது பழைய மாணவர் சங்கங்களின் பெயரில் மறைமுகமாக நிதி அறவிடப்படுவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. இத்தகைய முறைகேடான நிதி அறவீடுகளைக் கண்காணித்துத் தடுத்து நிறுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் கல்வி நிர்வாக அதிகாரிகளையே சாரும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல், இன்று செவ்வாய்க்கிழமை (10.02.2026) வடக்கு […]
