எங்கள் எதிர்காலச் சந்ததியை வளர்த்தெடுக்கும் நிறுவனங்கள்தான் பாடசாலைகள். மாணவர்களுக்கு நாங்கள் கல்விக்கு மேலதிகமாக தலைமைத்துவப்பண்பையும் வளர்த்துவிட வேண்டும். – கௌரவ ஆளுநர்
மாணவர்களிடத்தில் கல்வியிலும் இணைபாடவிதானச் செயற்பாடுகளிலும் போட்டி தேவை. ஆனால் பொறாமை இருக்கக் கூடாது. நாங்களும் நன்றாக வரவேண்டும். மற்றவர்களும் நன்றாக வரவேண்டும். அப்போதுதான் எமது சமூகம் வளர்ச்சியடையும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுரை வழங்கினார். கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் பி.ரவீந்திரநாதன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை (06.11.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், மாணவர்களுக்கான […]
