ஆளுநர்

கௌரவ ஆளுநருக்கும், ரஹமா நிறுவனத்தின் ஏற்பாட்டில் அழைத்து வரப்பட்ட சிறுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், ரஹமா நிறுவனத்தின் ஏற்பாட்டில் அழைத்து வரப்பட்ட சிறுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (01.10.2025) நடைபெற்றது. ரஹமா நிறுவனம் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் சிறுவர் உரிமை தொடர்பிலும் பணியாற்றி வருகின்றது. முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர் குழுக்களின் தலைவர்களே ஆளுநருடனான சந்திப்பில் ஈடுபட்டனர். போதைப்பொருள் பாவனையால் பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் சிறுவர்களால் ஆளுநருக்கு எடுத்துக்கூறப்பட்டது. […]

கௌரவ ஆளுநருக்கும், ரஹமா நிறுவனத்தின் ஏற்பாட்டில் அழைத்து வரப்பட்ட சிறுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. Read More »

இந்தியாவிலிருந்து வரும் அகதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக தீர்வு காண்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் அகதிகள் சர்வதேச விமான நிலையங்களில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸநாயகவுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வு காண்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு பிரதியிடப்பட்டு மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு, வடக்கு மாகாண ஆளுநரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக, போர்க்கால சூழ்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட துறைமுகம் மற்றும் மற்றும் முறையான கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தாமல், நாட்டை

இந்தியாவிலிருந்து வரும் அகதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக தீர்வு காண்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது. Read More »

ஆளுநர் செயலகத்தில் நவராத்திரி விழா

நவராத்திரி விழாவின் பத்தாம் நாள் நிகழ்வு, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (01.10.2025) நடைபெற்றது. ஆளுநர் செயலகப் பணியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.    

ஆளுநர் செயலகத்தில் நவராத்திரி விழா Read More »

மகளிர் விவகார அமைச்சின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல்

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (01.10.2025) நடைபெற்றது. மகளிர் விவகார அமைச்சு, கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், சமூகசேவைகள் திணைக்களம், தொழிற்றுறை

மகளிர் விவகார அமைச்சின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் Read More »

கௌரவ ஆளுநருக்கும், உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (30.09.2025) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தால் வடக்கு மாகாண விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. ‘பாடசாலை மாணவர்கள் விளையாட்டுக்களில் பங்கேற்கும் வீதம் குறைவடைந்து வருகின்றது. விளையாட்டில் ஈடுபடும் பிள்ளைகளைக்கூட பெற்றோர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரையில் மாத்திரமே பங்கேற்கவே அனுமதிக்கின்றனர். பிள்ளைகளும் பாடசாலை முடிந்ததும் தனியார்

கௌரவ ஆளுநருக்கும், உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. Read More »

இன்று மொழியறிவுக்கு மேலதிகமாக கணனியறிவும் அவசியம். அதனூடாக வேலை வாய்ப்புக்களை இலகுவாகப் பெறக் கூடியதாக இருக்கும். – ஆளுநர்

எமது தாய்மொழிக்கு மேலதிகமாக இன்னொரு மொழியைக் கற்பதால் வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பங்களை நாம் இலகுவாக்கிக் கொள்ள முடியும். சிங்கள மொழியைக் கற்றிருந்தால் இலங்கையின் எந்தப் பாகத்திலும் பணியாற்றக்கூடியதாக இருக்கும். இன்னொரு மொழியைக் கற்பதால் ஒருபோதும் நாம் குறைந்துவிடப்போவதில்லை. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஹெல்தி லங்கா நிறுவனம் மற்றும் சூரிய நிறுவகம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சுதுமலை

இன்று மொழியறிவுக்கு மேலதிகமாக கணனியறிவும் அவசியம். அதனூடாக வேலை வாய்ப்புக்களை இலகுவாகப் பெறக் கூடியதாக இருக்கும். – ஆளுநர் Read More »

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விக்சித் பாரத் ஓட்டம் 2025′ நிகழ்வில், கௌரவ ஆளுநரும் கலந்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (28.09.2025) நடைபெற்ற ‘யாழ்ப்பாணம் விக்சித் பாரத் ஓட்டம் 2025’ இன் நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி ஆகியோர் கலந்து கொண்டு, ஓட்ட நிகழ்வைத் தொடக்கி வைத்ததுடன் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவித்தனர். உலகளாவிய அளவில் 150 இற்க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில்

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விக்சித் பாரத் ஓட்டம் 2025′ நிகழ்வில், கௌரவ ஆளுநரும் கலந்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் Read More »

நவீன முறையினூடாக விவசாயிகள் குறைந்த முதலீட்டில் அதிக விளைச்சலை பெற்றுக் கொள்ள முடியும் – ஆளுநர்

எல்லாவற்றையும் எதிர்ப்பது என்ற மக்களின் மனநிலையில் மாற்றம் வேண்டும். கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு பேரம்பேசி எமக்குத் தேவையானதை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். இதனூடாக எமது மாகாண மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். யாழ்ப்பாணம் வர்த்தக கைத்தொழில்துறை மன்றத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் யாழ்ப்பாணம் செல்வா பலஸில் இன்று சனிக்கிழமை மாலை (27.09.2025) மன்றத்தின் தலைவர் கு.வசீகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய

நவீன முறையினூடாக விவசாயிகள் குறைந்த முதலீட்டில் அதிக விளைச்சலை பெற்றுக் கொள்ள முடியும் – ஆளுநர் Read More »

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டம் கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (26.09.2025) மீளவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தற்போதைய நிலையில் கால் ஏக்கர் வீதம் 30 விவசாயிகள் பயிர்ச்செய்கை செய்ய முடியும் எனவும் எதிர்காலத்தில் விவசாயிகள் முயற்சிகளைப் பொறுத்து இதனை இன்னமும் விரிவாக்க முடியும் என்றும் ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ள காணிகளையும் ஆளுநர் பார்வையிட்டார். விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைவாக, மாகாண குறித்தொதுக்கப்பட்ட

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டம் கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

கிளிநொச்சியில் பிணக்கின்றியுள்ள மக்களின் காணி ஆவணங்களை விரைந்து வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு ஆளுநர் பணிப்புரை

கிளிநொச்சி மாவட்டத்தில் பிணக்கின்றி ஆட்சி செய்து வருகின்ற மக்களுக்குரிய காணிகளின் ஆவணங்களை அவர்களுக்கு விரைந்து வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கான பொறிமுறையை உருவாக்குமாறும் மாகாணக் காணி ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் காணி தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமும், காணி நடமாடும் சேவையும் இன்று வெள்ளிக்கிழமை (26.09.2025) மாவட்டச் செயலர் சு.முரளிதரன் தலைமையில்

கிளிநொச்சியில் பிணக்கின்றியுள்ள மக்களின் காணி ஆவணங்களை விரைந்து வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு ஆளுநர் பணிப்புரை Read More »