கல்லுண்டாய் கிராமத்தில் புலம்பெயர்ந்தவர்களின் நிதிப் பங்களிப்பில் உருவான ‘இந்திரநிலா’ மணிமண்டபம் கௌரவ ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.
கல்லுண்டாய் குடியேற்றக் கிராமத்துக்கான மூலத்திட்டம் (Master plan) வடக்கு மாகாண பொறியியலாளர் சங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண சபையால் படிப்படியாக நிதி ஒதுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கல்லுண்டாய் குடியேற்றக் கிராமத்தில் புலம்பெயர்ந்தவர்களின் நிதிப் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட இந்திரநிலா மணிமண்டபம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் இன்று வியாழக்கிழமை காலை (09.10.2025) திறந்து வைக்கப்பட்டது. இங்கு ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில் மேலும் […]
