“சுற்றுலாத்துறை வளர்ச்சியின் ஊடாக வடக்கின் இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் பரந்தளவிலான தொழில் வாய்ப்புகள் கிட்டும்!” – ஆளுநர் நம்பிக்கை
வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறைப் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகின்ற போதிலும், அத்துறையில் போதியளவான பயிற்றப்பட்ட ஆளணிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. எனினும், தற்போதைய இளைய சமூகம் சுற்றுலாத்துறை சார் தொழில் வாய்ப்புகள் தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் உள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. எனவே, எதிர்காலத்தில் சுற்றுலாத்துறை மேலும் விரிவடையும்போது, அதற்கான ஆளணிகளை இங்கிருந்தே வழங்கக்கூடிய சூழல் உருவாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நம்பிக்கை வெளியிட்டார். வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாண சுற்றுலா விருதுகள் – […]
