2026 இல் மத்திய அமைச்சுக்களின் நிதிகள் நேரடியாக மாகாண சபைக்கு விடுவிக்கப்படக்கூடிய சூழல் உள்ளதால், மக்களுக்குத் தேவையான திட்டங்களை முற்கூட்டியே தயாரிக்க வேண்டும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்
வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு துறைக்குமான ஒருங்கிணைந்த மற்றும் நீண்டகால நிலைத்திருப்புக்கான அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பான முன்னோடிக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று திங்கட்கிழமை (24.11.2025) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் உரையாற்றிய ஆளுநர் அவர்கள், ‘தேசிய திட்டமிடல் திணைக்களம், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மற்றும் தேசிய வரவு–செலவுத் திட்டத் திணைக்களம் ஆகியவற்றின் பணிப்பாளர் நாயகங்கள் அடுத்த மாதம் வடக்குக்கு வருகை தரவுள்ளனர். வெளிநாட்டு நிதி வழங்குனர்கள் நிதியை […]
