ஜனாதிபதியின் அர்ப்பணிப்புடன் போதைப்பொருளை ஒழிக்க அனைவரும் கைகோர்ப்போம்!” – யாழ்ப்பாணத்தில் ஆளுநர் அழைப்பு
மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவுடன், உயிர்கொல்லி போதைப்பொருளை ஒழிப்பதற்கான நடவடிக்கையை அனைவரும் இணைந்து வெற்றிகரமாக முன்னெடுப்போம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார். விஷ போதைப்பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கான ‘முழுநாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாடு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மாவட்டச் செயற்பாட்டுக் குழுவை உருவாக்குவதுக்கான யாழ்ப்பாண மாவட்டக் கலந்துரையாடல், யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று புதன் கிழமை (14.01.2026) மாலை நடைபெற்றது. யாழ். […]
