கௌரவ ஆளுநருக்கும், உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (30.09.2025) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தால் வடக்கு மாகாண விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. ‘பாடசாலை மாணவர்கள் விளையாட்டுக்களில் பங்கேற்கும் வீதம் குறைவடைந்து வருகின்றது. விளையாட்டில் ஈடுபடும் பிள்ளைகளைக்கூட பெற்றோர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரையில் மாத்திரமே பங்கேற்கவே அனுமதிக்கின்றனர். பிள்ளைகளும் பாடசாலை முடிந்ததும் தனியார் […]
