ஆளுநர்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் ‘பொதுமக்கள் தினம்’ எதிர்வரும் திங்கட்கிழமை (15.12.2025) நடைபெறமாட்டாது

வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள், பொதுமக்களை நேரில் சந்திக்கும் வாராந்த ‘பொதுமக்கள் தினம்’ எதிர்வரும் திங்கட்கிழமை (15.12.2025) நடைபெறமாட்டாது என்பதைப் பொதுமக்களுக்கு அறியத் தருகின்றோம். எனினும், அதற்கு அடுத்த வார திங்கட்கிழமை (22.12.2025) வழமை போன்று ஆளுநர் செயலகத்தில் பொதுமக்கள் சந்திப்பு இடம்பெறும். எனவே, பொதுமக்கள் இந்த மாற்றத்தைக் கவனத்திற் கொண்டு, தமது வருகையைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் ‘பொதுமக்கள் தினம்’ எதிர்வரும் திங்கட்கிழமை (15.12.2025) நடைபெறமாட்டாது Read More »

மயிலிட்டி – திருப்பூர் ஒன்றிய மக்களின் நிதிப் பங்களிப்புடனான கற்றல் உபகரணங்கள் அடங்கிய 200 நிவாரணப் பொதிகள் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, கண்டி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்பட்டன.

மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய மக்களின் நிதியுதவியில், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மாணவர்களுக்கெனத் தொகுக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, கண்டி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் லலித் பண்டார அவர்களிடம் நேற்று (10.12.2025) புதன்கிழமை இரவு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. மயிலிட்டி முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை மற்றும் திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய நிர்வாகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், மயிலிட்டி – திருப்பூர்

மயிலிட்டி – திருப்பூர் ஒன்றிய மக்களின் நிதிப் பங்களிப்புடனான கற்றல் உபகரணங்கள் அடங்கிய 200 நிவாரணப் பொதிகள் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, கண்டி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்பட்டன. Read More »

“இந்திய மீனவர்களின் இழுவைமடித் தொழிலால் வாழ்வாதாரம் பாதிப்பு: ஜனாதிபதியை நேரில் சந்திக்க வடக்கு மீனவர்கள் கோரிக்கை” – ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு

இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி நடவடிக்கைகளால் வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பாதிப்புக்கள் தொடர்பாகவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் சந்தித்துக் கலந்துரையாடுவது குறித்தும், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்குரிய மனு வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (10.12.2025) சந்தித்து இக்கோரிக்கைக் கடிதத்தைக் கையளித்தனர். பல்வேறு இடர்பாடுகளின் போதும் இந்திய அரசாங்கம்

“இந்திய மீனவர்களின் இழுவைமடித் தொழிலால் வாழ்வாதாரம் பாதிப்பு: ஜனாதிபதியை நேரில் சந்திக்க வடக்கு மீனவர்கள் கோரிக்கை” – ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு Read More »

“1970 – 80 களில் இருந்தது போன்று வடக்கின் கூட்டுறவுத்துறை மீண்டும் தலைநிமிர வேண்டும்: தவறான முகாமைத்துவத்தால் மக்கள் நம்பிக்கை இழப்பு” – ஆளுநர் நா.வேதநாயகன் காட்டமான உரை

‘1970 – 1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் வடக்கின் கூட்டுறவுத்துறை எவ்வாறு செல்வாக்கு செலுத்திச் கோலோச்சியதோ, அதேபோன்று இத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடனும் உளச்சுத்தியுடனும் செயற்பட்டு வருகின்றது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கு எமது கூட்டுறவு அமைப்புக்கள் தம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பான விசேட ஆலோசனைக் கூட்டம்

“1970 – 80 களில் இருந்தது போன்று வடக்கின் கூட்டுறவுத்துறை மீண்டும் தலைநிமிர வேண்டும்: தவறான முகாமைத்துவத்தால் மக்கள் நம்பிக்கை இழப்பு” – ஆளுநர் நா.வேதநாயகன் காட்டமான உரை Read More »

பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ஒரு பேரிடருக்கு முகங்கொடுக்காத வகையில், அவர்களுக்கான தீர்வுகளை முன்வைத்தல் வேண்டும். – வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளின் போது, மத்திய மற்றும் மாகாண நிர்வாகங்களுக்கிடையில் எவ்வித வேற்றுமைகளும் இன்றி ஒருங்கிணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையாலேயே, பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகக் குறுகிய காலத்தில் ஓரளவாவது மீளக் கட்டியெழுப்ப முடிந்தது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (09.12.2025) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க மற்றும்

பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ஒரு பேரிடருக்கு முகங்கொடுக்காத வகையில், அவர்களுக்கான தீர்வுகளை முன்வைத்தல் வேண்டும். – வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கௌரவ ஆளுநர் தெரிவித்தார் Read More »

“மக்களின் துயர் துடைப்பதே முதற்பணி; அதிகாரிகளே தற்துணிவுடன் களமிறங்குங்கள்” – அபிவிருத்தி மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த வடக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு

வடக்கு மாகாணத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்குக் கரங்கொடுத்து, அவர்களை மீட்டெடுத்து வாழ்வாதாரத்தை உறுதி செய்வது எமது தார்மீகப் பொறுப்பாகும். பாதிக்கப்பட்ட மக்கள் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்புவதை உறுதி செய்யும் அதேவேளை, மாகாணத்தின் வருடாந்த அபிவிருத்தித் திட்டங்களையும் எவ்வித தாமதமுமின்றித் துரித கதியில் நிறைவு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தின் அனைத்துத் திணைக்களத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடனான அவசர உயர்மட்டக் கலந்துரையாடல்,

“மக்களின் துயர் துடைப்பதே முதற்பணி; அதிகாரிகளே தற்துணிவுடன் களமிறங்குங்கள்” – அபிவிருத்தி மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த வடக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு Read More »

‘டித்வா’ அனர்த்த மீட்பு: ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் ஆளுநரிடம் கடிதம் கையளிப்பு

டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்குத் துரித நடவடிக்கை எடுத்தமைக்காக மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று திங்கட்கிழமை (08.12.2025) கடிதமொன்றைக் கையளித்தனர். ஆளுநர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பல்கலைக்கழக மாணவர்களின் உடல் மற்றும் உள நலம் குறித்து ஆளுநர் விசாரித்தறிந்தார். அதனைத்

‘டித்வா’ அனர்த்த மீட்பு: ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் ஆளுநரிடம் கடிதம் கையளிப்பு Read More »

வடக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி மன்றங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட 14 வருமான பரிசோதகர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு

அரச சேவைக்கு நியமனம் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் தாம் அமரும் கதிரைக்குப் பாரமாக இல்லாமல், அந்தக் கதிரைக்குப் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் பணியாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி மன்றங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட 14 வருமான பரிசோதகர்களுக்கான (Revenue Inspectors) நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, அண்மையில் (01.12.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இயற்கைப் பேரிடர் காரணமாக எளிமையாக நடைபெற்ற, இந்நிகழ்வில் உரையாற்றும்போதே ஆளுநர்

வடக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி மன்றங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட 14 வருமான பரிசோதகர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு Read More »

நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் எவ்விதமான முறைகேடுகளுக்கோ, பாரபட்சங்களுக்கோ அல்லது ஊழலுக்கோ இந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. இது ஊழலை முற்றாக ஒழித்து, நேர்மையான நிர்வாகத்தை நிலைநாட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைய நாட்களில் உதவித்தொகை வழங்கல் தொடர்பில் முன்வைக்கப்படும் பல்வேறு கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும்

நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – கௌரவ ஆளுநர் Read More »

வடக்கு மாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடை விவரங்களைப் பதிவு செய்வதற்கும், அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான தொலைபேசி இலக்கங்கள்

வடக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தச் சூழல் காரணமாகக் கால்நடைத் துறைக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாகப் பொதுமக்கள் தொடர்புகொள்வதற்கென மாவட்ட ரீதியான தொலைபேசி இலக்கங்களை வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வெளியிட்டுள்ளார். கால்நடை வளர்ப்பாளர்கள் தமது அவசரத் தேவைகளுக்குப் பின்வரும்

வடக்கு மாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடை விவரங்களைப் பதிவு செய்வதற்கும், அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான தொலைபேசி இலக்கங்கள் Read More »