ஆளுநர்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டின் ஊடாக, இதுவரை தொட்டுப்பார்க்கப்பட்டிருக்காத வளங்கள் உரியவாறு பயன்படுத்தப்படும், – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் நம்பிக்கை

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டின் ஊடாக, வடக்கு மாகாணத்தில் இதுவரை தொட்டுப்பார்க்கப்பட்டிருக்காத வளங்கள் உரியவாறு பயன்படுத்தப்படும், என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார். ‘த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை’ (The Management Club – Sri Lanka) அமைப்பின் ஏற்பாட்டில், 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ‘வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாடு’ (Northern Investment Summit 2026) தொடர்பான விசேட […]

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டின் ஊடாக, இதுவரை தொட்டுப்பார்க்கப்பட்டிருக்காத வளங்கள் உரியவாறு பயன்படுத்தப்படும், – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் நம்பிக்கை Read More »

யாழ்ப்பாணத்தை முன்மாதிரி சுகாதார நகரமாக மாற்றும் திட்டத்தில், நடைமுறைச் சாத்தியமான விடயங்களை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும். – கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்குத் பணிப்புரை

யாழ்ப்பாணத்தை முன்மாதிரி சுகாதார நகரமாக மாற்றும் திட்டத்தில், வெறும் பேச்சுக்களை விடுத்து நடைமுறைச் சாத்தியமான விடயங்களை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும். அடுத்த கலந்துரையாடலுக்கு முன்னதாக, உறுதியான முன்னேற்றங்களை காண்பிக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் திட்டவட்டமான பணிப்புரையை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் சுகாதார நகரத் திட்டம் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி ராஜேஸ் பாண்டேவ் அவர்களின் பங்கேற்புடன், இன்று (22.12.2025) திங்கட்கிழமை மாலை ஆளுநர்

யாழ்ப்பாணத்தை முன்மாதிரி சுகாதார நகரமாக மாற்றும் திட்டத்தில், நடைமுறைச் சாத்தியமான விடயங்களை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும். – கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்குத் பணிப்புரை Read More »

பாதிக்கப்பட்ட மக்கள் விவரம் தந்தால் பதிவு செய்வோம், தராவிட்டால் விட்டுவிடுவோம் என்று அலுவலகத்தில் இருந்து கொண்டு அதிகாரிகள் செயற்பட முடியாது. – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன்

வெள்ளத்தில் தனது உடைமைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்த ஒருவரால் அதிகாரிகளைத் தேடி அலுவலகங்களுக்கு அலைந்து திரிய முடியாது. எனவே, அதிகாரிகளே அந்த மக்களைத் தேடிச் சென்று விவரங்களைச் சேகரிக்க வேண்டும், என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அத்துடன், பொதுமக்கள் தமது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில் முயற்சிகளைப் பதிவு செய்வதில் காட்டும் அக்கறையின்மையே, அனர்த்தங்களின் போது அவர்களுக்குரிய நிவாரணங்கள் கிடைப்பதில் சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு

பாதிக்கப்பட்ட மக்கள் விவரம் தந்தால் பதிவு செய்வோம், தராவிட்டால் விட்டுவிடுவோம் என்று அலுவலகத்தில் இருந்து கொண்டு அதிகாரிகள் செயற்பட முடியாது. – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் Read More »

வரலாற்றுச் சிறப்புமிக்க புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் பிரதமர் வழிபாடு”; ஆலய வரலாறு குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார்

கிளிநொச்சி மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள், மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்துக்கு இன்று (21.12.2025) ஞாயிற்றுக்கிழமை சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். இன்று காலை முதல் கிளிநொச்சியில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர், அதன் ஒரு பகுதியாக வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்துக்கும் வருகை தந்தார். ஆலயத்துக்கு வருகை தந்த பிரதமரை ஆலய நிர்வாகத்தினரும் பொதுமக்களும் வரவேற்றனர். அதனைத்

வரலாற்றுச் சிறப்புமிக்க புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் பிரதமர் வழிபாடு”; ஆலய வரலாறு குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார் Read More »

*இரணைமடு குளத்தை கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

வடக்கு மாகாண விவசாயத்தின் உயிர்நாடியாகத் திகழும் இரணைமடு குளத்தை கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் இன்று (21.12.2025) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டார். இன்று காலை கிளிநொச்சியில் நடைபெற்ற ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதமர், அதனைத் தொடர்ந்து மதிய வேளையில் இரணைமடு குளத்துக்கு பயணம் மேற்கொண்டார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் குளத்தின் நீர் முகாமைத்துவம் மற்றும் பயன்பாடு

*இரணைமடு குளத்தை கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். Read More »

ஜனாதிபதி நிதியம் இனி வறிய மக்களுக்கே!” – கிளிநொச்சியில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உறுதி

எமது அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்தை முற்றுமுழுதாக வறிய மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தும், என கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட வேலைத்திட்டத்தின் இந்த ஆண்டுக்கான இறுதி நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (21.12.2025) கிளிநொச்சி இரணைமடுவிலுள்ள ‘நெலும் பியச’ கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். கடந்த

ஜனாதிபதி நிதியம் இனி வறிய மக்களுக்கே!” – கிளிநொச்சியில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உறுதி Read More »

பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்குத் துணிவு வேண்டும். உங்களால் முடிவெடுக்கவோ, செயலாற்றவோ முடியாது என்றால் பதவிகளை விட்டுத் தாராளமாகச் செல்லலாம் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குக் காட்டமாகத் தெரிவித்தார்.*

பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் துணிந்து, விரைந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். சப்பைக்கட்டு காரணங்களைச் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. உங்களால் முடிவெடுக்கவோ, செயலாற்றவோ முடியாது என்றால் பதவிகளை விட்டுத் தாராளமாகச் செல்லலாம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்குக் காட்டமாகத் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை ஆராயும் விசேட கூட்டம், இன்று (20.12.2025) சனிக்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குத்

பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்குத் துணிவு வேண்டும். உங்களால் முடிவெடுக்கவோ, செயலாற்றவோ முடியாது என்றால் பதவிகளை விட்டுத் தாராளமாகச் செல்லலாம் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குக் காட்டமாகத் தெரிவித்தார்.* Read More »

‘மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இந்த அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். – ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் எமது திட்டங்களுக்கான நிதியை குறைக்காது விடுவித்துள்ளமையானது, இவ்வரசாங்கத்தின் சிறப்பான நிதி முகாமைத்துவத்தை வெளிப்படுத்துவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று (20.12.2025) சனிக்கிழமை காலை வடக்கு

‘மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இந்த அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். – ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

“பின்தங்கிய கிராம மக்களுக்கான வாக்குறுதிகள் 2026 திட்டங்களில் கட்டாயம் உள்ளடக்கப்பட வேண்டும்” – வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை.

வடக்கு மாகாணத்தின் பின்தங்கிய கிராமங்களின் உண்மை நிலையை நேரில் கண்டு உணர்ந்து, அம்மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை ஆராயும் விசேட கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை (19.12.2025) மாலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்துக்குத்

“பின்தங்கிய கிராம மக்களுக்கான வாக்குறுதிகள் 2026 திட்டங்களில் கட்டாயம் உள்ளடக்கப்பட வேண்டும்” – வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை. Read More »

அரசின் நாட்டைக் கட்டியெழுப்பும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ் ஒரு மில்லியன் ரூபா பணத்தை வைப்பிலிட்டார்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் நாட்டைக் கட்டியெழுப்பும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ் அவர்கள் பணத்தை வைப்பிலிட்டு அதன் ஆவணத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை (19.12.2025) ஆளுநர் செயலகத்தில் வைத்துக் கையளித்தார். பேராசிரியர் சு.மோகனதாஸ் அவர்களின் சகோதரன் சு.கணேதாஸ் அவர்களால் ஒரு மில்லியன் ரூபா மேற்படி நிதியத்துக்கு வைப்புச் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆவணத்தை ஆளுநரிடம் கையளித்த நிலையில் ஜனாதிபதி செயலகத்துக்கு

அரசின் நாட்டைக் கட்டியெழுப்பும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ் ஒரு மில்லியன் ரூபா பணத்தை வைப்பிலிட்டார் Read More »