வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்களைக் கவர்ந்து முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டுமாயின், இங்குள்ள நிர்வாக ரீதியான செயற்பாடுகள் உடனடியாக இலகுபடுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்களை ஊக்குவித்து, அவர்களது முதலீட்டுத் திட்டங்களுக்கான நடைமுறைகளை இலகுபடுத்தும் நோக்கிலான விசேட கலந்துரையாடல் ஒன்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (17.03.2026) நண்பகல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Management Club Investment Forum உடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இக் கலந்துரையாடலில், வடக்கு மாகாணத்திற்கான முதலீட்டுத் திட்டங்களைத் துரிதப்படுத்தும் நோக்கில் அவற்றை டிஜிட்டல் மயப்படுத்தி கையாள்வதற்காக, வவுனியாப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுவரும் ” One Stop Shop Investment […]
