‘தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் – 2026’ எனும் தொனிப்பொருளின் கீழ் மாகாண சபைகளின் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
நான் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலங்களில் வீட்டுத்திட்டங்களுக்குரிய பயனாளிகளைத் தெரிவு செய்யும்போது பல்வேறு அரசியல் தலையீடுகள் இருந்தன. ஆனால், தற்போது மாகாண சபையால் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இன்றி, முற்றுமுழுதாகச் சுயாதீனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நாம் செயற்பட்டிருக்கின்றோம், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, ‘தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் – 2026’ எனும் தொனிப்பொருளின் கீழ் மாகாண சபைகளின் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை […]
