ஆளுநர்

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு ஆளுநர் விஜயம்

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 11 ஏப்பிரல் 2019 அன்று காலை விஜயம் செய்தார். கீரிமலை நகுலேஸ்வரத்தினை புனித பூமியாக பிரகடனப்படுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தின்போது கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அரச அதிகாரிகளுடனும் ஆளுநர் அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த கலந்துரையாடலின் பின்னர் ஆளுநர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், கீரிமலை புனித ஸ்தலம் இலங்கையின் வரலாற்றில் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றாகும். ஆலயத்திலுள்ள […]

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு ஆளுநர் விஜயம் Read More »

ஆளுநரின் பொதுமக்கள் தினம்

ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் 10 ஏப்பிரல் 2019 அன்று நடைபெற்றது. – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் பொதுமக்கள் தினம் Read More »

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு விஜயம்

முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் அவர்களும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம் பௌவுசி அவர்களும் சுவிஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகளின் தூதுவர்களும் பங்களாதேஸின் உயர்ஸ்தானிகரும் 09 ஏப்பிரல் 2019 அன்று பிற்பகல் ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இதன்போது தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்த்திற்குமான அலுவலகம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் இதுவரையிலும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திராத றுகுணு பல்கலைக்ககழத்தின் 50 மாணவர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு விஜயம் Read More »

யாழ் விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களை ஆளுநர் வரவேற்றார்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான கௌரவ சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 09 ஏப்பிரல் 2019 அன்று முற்பகல் பலாலி விமான நிலையத்தில் வரவேற்றார் – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

யாழ் விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களை ஆளுநர் வரவேற்றார் Read More »

மாகாண கண்காட்சி ஆளுநர் தலைமையில் ஆரம்பம்

வடமாகாணத்தின் கிராமிய மட்டத்திலான உற்பத்தி பொருட்களுக்கான அறிமுகத்தினையும் சந்தை வாய்ப்பினையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் மாகாணக் கண்காட்சி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் 09 ஏப்பிரல் 2019 அன்று காலை யாழ் மத்திய கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கிராமிய மட்டத்திலான உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். இக்கண்காட்சி யாழ் மத்திய கல்லூரியில் இன்றும் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. –

மாகாண கண்காட்சி ஆளுநர் தலைமையில் ஆரம்பம் Read More »

எந்த தடை வந்தாலும் நான் மக்களுக்கு செய்ய வேண்டிய பணியை முன்னெடுப்பேன் – ஆளுநர்

நான் இருக்கும் கடைசி நிமிடம் வரை விழுந்துபோயுள்ள இந்த தேசத்தை திரும்பவும் வலிமைபெற வைப்பதற்கு எந்த தடை வந்தாலும் முயற்சிப்பேன் என்று வடமாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களில் பணிபுரிவதற்கு உள்வாங்கப்பட்ட அலுவலக உதவியாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் கௌரவ ஆளுநர் தலைமையில் 08 ஏப்பிரல் 2019 அன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 91 அலுவலக உதவியாளர்கள் , 4 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் (குடிசார்)

எந்த தடை வந்தாலும் நான் மக்களுக்கு செய்ய வேண்டிய பணியை முன்னெடுப்பேன் – ஆளுநர் Read More »

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன பிரதம குருக்கள் – ஆளுநர் சந்திப்பு

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன பிரதம குருக்கள் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 08 ஏப்பிரல் 2019 அன்று பிற்பகல் யாழ் நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்தில் இடம்பெற்றது. யாழ் மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்தில் இந்துக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகள் தொடர்பில் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதுடன், வடமாகாணத்தில் அண்மைக்காலமாக மதங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பிலும் அதனை எவ்வாறு இல்லாமல் செய்து வடமாகாணத்தில் இனங்களுக்கிடையிலான நல்லுறவினை கட்டியெழுப்ப முடியும்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன பிரதம குருக்கள் – ஆளுநர் சந்திப்பு Read More »

ஊடகவியலாளர்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – ஆளுநர்

மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதற்காக பணியாற்றும் ஊடகவியலாளர்கள் தமது ஒவ்வொரு அறிக்கையிடலின்போதும் சமூகப் பொறுப்புடன் பணியாற்ற வேண்டுமென ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். சர்வதேச ஊடக உதவி (International Media Support) அமைப்பு யாழ் ஊடக அமையத்துடன் இணைந்து வடமாகாண ஊடகவியலாளர்களுக்காக நடாத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பிலான பயிற்சி பட்டறையில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கும் நிகழ்வு 05 ஏப்பிரல் 2019 அன்று மாலை யாழில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு

ஊடகவியலாளர்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – ஆளுநர் Read More »

புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

யாழ் மாவட்டத்தின் பிரதிப்பொலிஸ்மா அதிபராக புதிதாக கடமையேற்றுள்ள ராஜித ஸ்ரீ தமிந்த அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 05 ஏப்பிரல் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருவருக்குமிடையில் யாழ்மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது வன்செயல்கள் அதிகரித்து காணப்படும் பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதிகளில் அதிக பொலிஸ் கண்காணிப்பினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ ஆளுநர் அவர்கள் பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டார். –

புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »

நாளைய தினத்தில் நாம் இதைவிட நன்மையாக வாழ்வது எப்படி? – கௌரவ ஆளுநர்

நாளைய தினத்தில் நாம் இதைவிட நன்மையாக வாழ்வது எப்படி? இதுவே ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மனித சமுதாயமும் தனியாகவும் குழுவாகவும் கேட்கவேண்டிய ஒரே ஒரு கேள்வி என்று நான்காவது சர்வதேச தமிழ் இதழியல் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். இதழியல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு யாழ் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் 05 ஏப்பிரல் 2019 அன்று முற்பகல் கௌரவ ஆளுநர்

நாளைய தினத்தில் நாம் இதைவிட நன்மையாக வாழ்வது எப்படி? – கௌரவ ஆளுநர் Read More »