மாகாண கண்காட்சி ஆளுநர் தலைமையில் ஆரம்பம்

வடமாகாணத்தின் கிராமிய மட்டத்திலான உற்பத்தி பொருட்களுக்கான அறிமுகத்தினையும் சந்தை வாய்ப்பினையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் மாகாணக் கண்காட்சி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் 09 ஏப்பிரல் 2019 அன்று காலை யாழ் மத்திய கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கிராமிய மட்டத்திலான உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

இக்கண்காட்சி யாழ் மத்திய கல்லூரியில் இன்றும் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு