மகளிர் விவகார அமைச்சு

புதிய பேரூந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விற்பனை சந்தை – 2022

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக, யாழ் மாவட்டத்திலுள்ள தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை காட்சிபடுத்தி விற்பனை செய்யும் முகமாக தொழிற்துறைத் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களுடனான விற்பனை சந்தையானது யாழ்ப்பாணம் புதிய பேரூந்து நிலைய வளாகத்தில் 28.11.2022ஆம் திகதி நடைபெற்றது. மேற்படி விற்பனை சந்தையானது, சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், அவர்களிடையே சிறந்த தொடர்புகளை ஏற்படுத்துவதை பிரதானமான நோக்கமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டது. இவ் விற்பனைச்சந்தை காலை 8.30 மணி ஆரம்பமாகி […]

புதிய பேரூந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விற்பனை சந்தை – 2022 Read More »

வருடாந்த நெசவுத் தொழில் முயற்சியாளர் கௌரவிப்பும் விருது வழங்கல் நிகழ்வும் – 2022

தொழிற்துறைத் திணைக்களத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட வடமாகாண கைத்தறி நெசவுப் போட்டியானது 18.10.2022ம் திகதி அன்று ஆசிரியர் பயிற்சிகூடம் நல்லூரில் நடாத்தப்பட்டது. பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த நெசவு உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களானது புடைவை கைத்தொழில் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடுவர் குழுமத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களால் வழங்கப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் 31 வெற்றியாளர் பரிசில் வழங்குவதற்க்கு தகுதியானவர்களென தீர்மானிக்கப்பட்டது. மேலும் வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வானது 26.11.2022ம் திகதி யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பித்து மிகச்

வருடாந்த நெசவுத் தொழில் முயற்சியாளர் கௌரவிப்பும் விருது வழங்கல் நிகழ்வும் – 2022 Read More »

வர்த்தகச் சந்தை – 2022, தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம்

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு பொருத்தமான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் அவர்களின் உள்ளுர் உற்பத்தி பொருட்களின் உற்பத்தி செயற்பாட்டினை ஊக்குவிப்பதற்கும் தொழிற்துறைத் திணைக்களம் வட மாகாணத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சந்தை நிகழ்வானது கௌரவ ஆளுநர் செயலக வளாகத்தில் 17.11.2022 அன்று நடைபெற்றது. இச்சந்தையில் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின் 40 விற்பனை காட்சி கூடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கௌரவ ஆளுநர் – வட மாகாணம் மற்றும் செயலாளர் – மகளீர் விவகார அமைச்சு, வட

வர்த்தகச் சந்தை – 2022, தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் Read More »

வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் சந்தை ஊக்குவிப்பு நிகழ்வு நடைபெற்றது

வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் உற்சவ காலத்தில் மேற்படி சந்தை ஊக்குவிப்பு நிகழ்வு 24.08.2022 தொடக்கம் 26.08.2022 வரை நடைபெற்றது. இதில் சுமார் 75 காட்சியறைகள் தொழிற்துறை திணைக்களத்தால் நிறுவப்பட்டு சிறிய நடுத்தர முயற்சியாளர்களின் சந்தைப்படுத்தல் நடவடிக்கைக்காக வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் திருமதி. ரூபிணி வரதலிங்கம், செயலாளர், மகளீர் விவகார அமைச்சு வடமாகாணம், திருமதி. வனஜா செல்வரட்ணம், வடமாகாணப் பணிப்பாளர், தொழிற்துறை திணைக்களம் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்ததுடன் அனைத்து விற்பனைக்

வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் சந்தை ஊக்குவிப்பு நிகழ்வு நடைபெற்றது Read More »

தொழிற்துறை திணைக்களத்தினால் இரண்டாம் கட்டமாக வளவாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிநெறி வழங்கப்பட்டது

தொழிற்துறை திணைக்களம் வடமாகாணம் ILO நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தும் LEED+ செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக (Second Phase)  பயனாளிகளான சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை (MSME) சந்தைப்படுத்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் வியாபார அபிவிருத்தி தொடர்பாக தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி கருத்தரங்கு இரண்டு கட்டமாக 20.07.2022 தொடக்கம் 22.07.2022 வரை மூன்று நாட்களும் மற்றும் 17.08.2022 தொடக்கம் 18.08.2022 வரை இரண்டு நாட்களும் Green Grass Hotel, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. மேலும் முதலாம் பிரிவின்

தொழிற்துறை திணைக்களத்தினால் இரண்டாம் கட்டமாக வளவாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிநெறி வழங்கப்பட்டது Read More »

சர்வதேச மகளிர் தினம் 2022

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினமானது ‘நாடும், தேசமும், உலகமும், அவளே’ எனும் தொனிப்பொருளில்  2022.03.08 அன்று அமைச்சு அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. வட மாகாண மகளிர் விவகாரம், கூட்டுறவு, சமூக சேவைகள், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சின் செயலாளர் திருமதி. ரூபினி வரதலிங்கம் அவர்கள் இந் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இந் நிகழ்வில் அமைச்சின் திணைக்களத் தலைவர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், பெண்

சர்வதேச மகளிர் தினம் 2022 Read More »

இராஜாங்க அமைச்சரின் விஜயமும் கைத்தறி கையளிப்பு நிகழ்வும்

தொழிற்துறை திணைக்களம் வட மாகாணத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வேப்பங்குளம் அம்பலாங்கொட மற்றும் வைரவப்புளியங்குளம் கைத்தறி நெசவு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களிற்கு பற்றிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ தயாசிறி ஜெயசேகர அவர்கள் 19 பெப்ரவரி 2022 அன்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இந் நிகழ்வின் போது மேற்படி அமைச்சின் ஒதுக்கீட்டின் கீழ் தயாரிக்கப்பட்ட புதிய நெசவு தறிகளினை (Hand loom) வேப்பங்குளம் கைத்தறி நெசவு நிலையம்

இராஜாங்க அமைச்சரின் விஜயமும் கைத்தறி கையளிப்பு நிகழ்வும் Read More »

இலங்கை கைத்தொழில் கண்காட்சி – 2022

இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையுடன் இணைந்து கைத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை கைத்தொழில் கண்காட்சி 2022 பெப்ரவரி மாதம் 03, 04, 05 மற்றும் 06 திகதிகளில் பணடாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண தொழிற்துறை திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட ஒரு விற்பனை கூடத்தில் வட மாகாண பற்றிக் உற்பத்திகள், கைத்தறி உற்பத்திகள் மற்றும் மட்பாண்ட உற்பத்தி பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் இடம்பெற்றது. வட மாகாணத்தில் இயங்கும் நெசவு நிலையங்களில் வேலை

இலங்கை கைத்தொழில் கண்காட்சி – 2022 Read More »

தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் வர்த்தகச் சந்தை – 2022

தைப்பொங்கலை முன்னிட்டு பற்றிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் அனுசரணையுடன் தொழிற்துறைத் திணைக்களம் வட மாகாணத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சந்தை – 2022 நிகழ்வானது யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஜனவரி 11 மற்றும் 12 ம் திகதிகளில்  நடைபெற்றது. இச் சந்தையில் உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள், பற்றிக் கைத்தறி புடவை உற்பத்தியாளர்கள் மற்றும் கைப்பணி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 45 விற்பனை கூடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன் இதில் 15 கைத்தறி நெசவு உற்பத்திகள்

தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் வர்த்தகச் சந்தை – 2022 Read More »

‘சில்ப அபிமானி’ – மாகாண மட்ட கைப்பணிப் போட்டி – 2021 விருது வழங்கும் விழா

உள்ளூர் கைப்பணி கலைஞர்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நோக்கில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களம் தேசிய அருங்கலைகள் பேரவையுடன் இணைந்து இவ்வாண்டு ஓக்ரோபர் மாதம் 23ம் திகதி யாழ் கனகரத்தினம் மத்திய மகா  வித்தியாலயத்தில் நடாத்திய மாகாண மட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் ‘சில்ப அபிமானி’ ஜனாதிபதி விருது கைப்பணிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களை கௌரவிக்கும் முகமாக விருது வழங்கும் விழா தொழிற்துறை திணைக்கள பணிப்பாளரின் தலைமையில் ஹோட்டல் திண்ணையில் இல் டிசம்பர் மாதம் 12ம் திகதி

‘சில்ப அபிமானி’ – மாகாண மட்ட கைப்பணிப் போட்டி – 2021 விருது வழங்கும் விழா Read More »