சர்வதேச மகளிர் தினம் 2022

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினமானது ‘நாடும், தேசமும், உலகமும், அவளே’ எனும் தொனிப்பொருளில்  2022.03.08 அன்று அமைச்சு அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

வட மாகாண மகளிர் விவகாரம், கூட்டுறவு, சமூக சேவைகள், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சின் செயலாளர் திருமதி. ரூபினி வரதலிங்கம் அவர்கள் இந் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இந் நிகழ்வில் அமைச்சின் திணைக்களத் தலைவர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள் பங்கு பற்றலுடன் சிறப்புற நடைபெற்றது.

இந் நிகழ்வில் பால்நிலை சார் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உடனடி உதவிப் பொருட்கள் அடங்கிய 25 பொதிகள் முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டது.

மகளிர் விவகார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற  நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் பெண் தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்பதற்காக வழங்கப்பட்ட உதவித்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பான விபரணச்சித்திர ஒளிப்படப்பதிவு காட்சிப்படுத்தப்பட்;டது.

அத்துடன், 2019 ஆம் ஆண்டு கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘மகளிர் மகுடம்’ எனும் விசேட கடன் திட்டத்தின் கீழ் இவ் வருடமும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதார செயற்பாடுகளுக்காக சுழற்சிமுறை கடன் கூட்டுறவு நிதியிலிருந்து தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் சிக்கன கடன் கூட்டுறவுச் சங்களினூடாக பயனாளிகளுக்கு வழங்குவதற்காக வடமாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டது.