மகளிர் விவகார அமைச்சு

வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் ‘தொழில் யோசனையினை உருவாக்குதல்’ பயிற்சிநெறி நடாத்தப்பட்டது

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் லீட் செயற்திட்டத்தின்(ILO LEED + Project) கீழ் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 20 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 01 செப்ரெம்பர் 2023 தொடக்கம் 03 செப்ரெம்பர் 2023 வரை 3 நாட்கள் சாவகச்சேரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறியின் வளவாளர்களாக தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள் கடமையாற்றினர். இப் பயிற்சியில் பங்கு …

வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் ‘தொழில் யோசனையினை உருவாக்குதல்’ பயிற்சிநெறி நடாத்தப்பட்டது Read More »

தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் – வர்த்தகச் சந்தை –2023 Under ILO LEED+ Project

வடமாகாணத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களினுடைய உற்பத்திகளின் சந்தை வாய்ப்பினை மேம்படுத்தும் நோக்குடன் ILO LEED+ செயற்திட்டத்தின் நிதி பங்களிப்புடன் வட மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால்  ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சந்தை – 2023 நிகழ்வானது கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் மார்ச் மாதம் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணிவரை நடைபெற்றது. இச் சந்தையில் உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள், பற்றிக் கைத்தறி புடவை மற்றும் கைப்பணி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் …

தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் – வர்த்தகச் சந்தை –2023 Under ILO LEED+ Project Read More »

கைவினைக் கலைஞர்களுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைத் திறக்கும் “Crafting Ceylon” வேலைத்திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

நாட்டில் காணப்படும் பொருளாதார பின்னடைவுக்கு முகங்கொடுத்து கைப்பணிக் கைத்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கைப்பணியாளர்களின் உற்பத்திகளுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய அருங்கலைகள் பேரவையினால் 2022ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஏற்றுமதி முன்னிலை உற்பத்தி அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைவாக மாகாணங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆக்கங்கள் ஜனவரி 19ம், 20ம் திகதிகளில் பண்டார ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற தெரிவுக்கு காட்சிப்படுத்தப்பட்டு அதில் முதற்கட்டமாக அகில இலங்கை ரீதியாக 546 …

கைவினைக் கலைஞர்களுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைத் திறக்கும் “Crafting Ceylon” வேலைத்திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது Read More »

சர்வதேச மகளிர் தினம் 2023

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் யாழ் இந்திய துணைத் தூதரகமும் இணைந்து ‘பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் 15.03.2023 அன்று காலை 09.00 மணி தொடக்கம் பிற்பகல் 05.30 மணி வரை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வானது மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி .ரூபினி வரதலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கௌரவ திரு. ஜீவன் …

சர்வதேச மகளிர் தினம் 2023 Read More »

வர்த்தகச் சந்தை – 2023, தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம்

வட மாகாணத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களினுடைய உற்பத்திகளின் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்குடன் ILO LEED+ செயற்திட்டத்தின் நிதி பங்களிப்புடன் தொழிற்துறைத் திணைக்களம் வட மாகாணத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சந்தை – 2023 நிகழ்வானது வவுனியா நகர சபை மைதானத்தில் ஜனவரி மாதம் 26 மற்றும் 27ம் திகதிகளில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணிவரை நடைபெற்றது. இச் சந்தையில் உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள், பற்றிக் கைத்தறி புடவை உற்பத்தியாளர்கள் மற்றும் …

வர்த்தகச் சந்தை – 2023, தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் Read More »

சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் யாழ் விஜயம்

சார்க் குழுமத்தின் பிரதிநிதிகள் 06.01.2023 அன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளை கௌரவ ஆளுநரின் வழிகாட்டலுக்கமைய சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழிற்திறன் பயிற்சி மையத்திற்கும் விஜயம் செய்திருந்தனர். அங்கு நெசவுத் தொழிற்பயிற்சி நடாத்தும் நிலையத்தினை பார்வையிட்டத்துடன் அந்நிலையத்தில் வேலை செய்யும் பெண் நெசவுத் தொழிலாளர்களுடனும் தொழிற்துறை திணைக்காளத்தின் மாகாணப் பணிப்பாளருடனும் உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்பு தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர். மேலும் மனித வலுவினை பயன்படுத்தி பெண்களால் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் புடவைகள் மற்றும் ஆடவர்களுக்கான உடுப்புக்கள் என்பனவற்றை …

சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் யாழ் விஜயம் Read More »

வெளிநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் கைத்தறி நெசவு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்

வெளிநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் சிறுப்பிட்டியில் அமைந்துள்ள வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் கைத்தறி நெசவுப் பயிற்சி நிலையத்திற்கு 18 டிசெம்பர் 2022 அன்று விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன் போது நெசவாளர்களுடன் தற்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடியதுடன் நெசவாளர்களின் தயாரிப்புகளில் காணப்படும் அவர்களின் முயற்சியையும் பாராட்டினர். மேலும் நெசவுத் தயாரிப்புகளை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதன்போது மொத்த விற்பனையானது ரூபாய் 67,000.00 ஆகக் காணப்பட்டது.         …

வெளிநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் கைத்தறி நெசவு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர் Read More »

ஆசிய நாடுகளின் தூதுவர்களின் யாழ் விஜயம்

தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து ஆசிய குரூப் என்ற பெயரில் தூதுவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவர்கள் சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழில் திறன் பயிற்சி மையத்திற்கு விஜயம் செய்தனர். அங்கு நெசவுத்தொழிற்பயிற்சி நடாத்தும் நிலையத்தினை பார்வையிட்டத்துடன் பெண்களின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் பெண்களை வலுவூட்டுவது தொடர்பாகவும் கலந்துரையாடினர். மேலும் மனிதவலுவினை பயன்படுத்தி பெண்களால் செய்யப்படுகின்ற ஆடைகள் புடவைகள் மற்றும் ஆடவர்களுக்கான உடுப்புக்கள் என்பனவற்றை பார்வையிட்டு தமது பாராட்டுகளையும் …

ஆசிய நாடுகளின் தூதுவர்களின் யாழ் விஜயம் Read More »

புதிய பேரூந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விற்பனை சந்தை – 2022

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக, யாழ் மாவட்டத்திலுள்ள தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை காட்சிபடுத்தி விற்பனை செய்யும் முகமாக தொழிற்துறைத் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களுடனான விற்பனை சந்தையானது யாழ்ப்பாணம் புதிய பேரூந்து நிலைய வளாகத்தில் 28.11.2022ஆம் திகதி நடைபெற்றது. மேற்படி விற்பனை சந்தையானது, சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், அவர்களிடையே சிறந்த தொடர்புகளை ஏற்படுத்துவதை பிரதானமான நோக்கமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டது. இவ் விற்பனைச்சந்தை காலை 8.30 மணி ஆரம்பமாகி …

புதிய பேரூந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விற்பனை சந்தை – 2022 Read More »

வருடாந்த நெசவுத் தொழில் முயற்சியாளர் கௌரவிப்பும் விருது வழங்கல் நிகழ்வும் – 2022

தொழிற்துறைத் திணைக்களத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட வடமாகாண கைத்தறி நெசவுப் போட்டியானது 18.10.2022ம் திகதி அன்று ஆசிரியர் பயிற்சிகூடம் நல்லூரில் நடாத்தப்பட்டது. பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த நெசவு உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களானது புடைவை கைத்தொழில் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடுவர் குழுமத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களால் வழங்கப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் 31 வெற்றியாளர் பரிசில் வழங்குவதற்க்கு தகுதியானவர்களென தீர்மானிக்கப்பட்டது. மேலும் வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வானது 26.11.2022ம் திகதி யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பித்து மிகச் …

வருடாந்த நெசவுத் தொழில் முயற்சியாளர் கௌரவிப்பும் விருது வழங்கல் நிகழ்வும் – 2022 Read More »