வர்த்தகக் கண்காட்சிகள் வெறும் பொருட்காட்சிகள் மட்டுமல்ல. அவை பொருளாதார வளர்ச்சியின் இயந்திரங்களாகும். – யாழ் வர்த்தக கண்காட்சியில் கௌரவ ஆளுநர்
யாழ்ப்பாணத்தை இலங்கையின் பொருளாதாரத்தில் வெறுமனே ஒரு பங்காளராக மட்டுமல்லாமல், புத்தாக்கம் மற்றும் வர்த்தகத்தின் ஒரு உந்துசக்தியாக முன்னிறுத்துவதே எமது கூட்டு இலக்காகும். அதற்கு இந்தக் கண்காட்சியே சிறந்த சான்றாகும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் வர்த்தகப் பெருவிழாவான ‘யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026’, 16வது ஆண்டாக இம்முறை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (23.01.2026) காலை யாழ்ப்பாணம் ரில்கோ […]
